நவம்பர் 4 ஆம் தேதியன்று அனைத்து இறைச்சிக் கடைகள் இயங்க,இறைச்சி விற்பனை செய்ய சென்னை மாநகராட்சி தடை விதித்துள்ளது.
மகாவீர் நிர்வான் நாளை முன்னிட்டு நவம்பர் 4 ஆம் தேதியன்று சென்னையில் அனைத்து இறைச்சி கடைகளும் இயங்கத் தடை விதித்து சென்னை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது.அதில் கூறப்பட்டிருப்பதாவது:
“பெருநகர சென்னை மாநகராட்சி, பொது சுகாதாரத்துறையின் (கால்நடை மருத்துவப்பிரிவு) கட்டுப்பாட்டில் இயங்கும் இறைச்சிக்கூடங்கள் அனைத்தும் வருகின்ற 04.11.2021 (வியாழக்கிழமை) அன்று மகாவீர் நிர்வான் நாளை முன்னிட்டு, அரசு உத்தரவின்படி மூடப்படுகின்றன. இதே போல் ஆடு/மாடு, கோழி இதர இறைச்சி கடைகளில் இறைச்சி விற்பனை செய்வதற்கும் தடை செய்யப்பட்டுள்ளது.
பல்பொருள் அங்காடிகள் மற்றும் வணிக வளாகங்களில் பதப்படுத்திய இறைச்சி விற்பனை செய்யவும் தடை செய்யப்பட்டுள்ளது. எனவே, அரசு உத்தரவின்படி கண்டிப்பாக 04.11.2021 (வியாழக்கிழமை) அன்று முழுவதும் அனைத்து, இறைச்சிக்கடைகள், பல்பொருள் அங்காடிகள் மற்றும் வணிக வளாகங்களில் இறைச்சி விற்பனை செய்ய வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறது.அரசு உத்தரவினை செயல்படுத்த வியாபாரிகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
அனைத்து மண்டலங்களிலும் மண்டல நல அலுவலர், கால்நடை உதவி மருத்துவர். துப்புரவு அலுவலர் மற்றும் சுகாதார ஆய்வாளர் அடங்கிய குழு அமைத்து கண்காணிக்க மண்டல அலுவலர்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள்”, என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நவம்பர் 4 ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.
வாஷிங்டன் : அமெரிக்காவில் 47-வது அதிபர் தேர்தலானது நிறைவடைந்து, 2-வது முறையாக டொனால்ட் டிரம்ப் அமெரிக்க அதிபராக மீண்டும் தேர்வாகி…
டர்பன் : இந்திய அணி, தென்னாபிரிக்காவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு டி20 தொடரில் விளையாடவுள்ளது. இந்த டி20 தொடரில் 4…
ஒட்டாவா : கனடாவில் இந்திய தூதரகங்கள் ஏற்பாடு செய்திருந்த தூதரக சேவை முகாம்களுக்கு, கனடா பாதுகாப்பு அதிகாரிகள் அதாவது அந்நாட்டு…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்…
நீலகிரி : கடந்த 3ம் தேதி பெய்த மழையால் மலை ரயில் பாதையின் பல இடங்களில் மண் சரிவுகள் ஏற்பட்டன,…
சென்னை : கேரள மாநிலத்தில் மிகவும் பிரசித்திபெற்ற சபரிமலையில் உள்ள அய்யப்பன் கோவிலில் மண்டல, மகர விளக்கு சீசனையொட்டி அடுத்த…