சென்னை மக்களுக்கு குட்நியூஸ்…நாளை முதல் அனுமதி – வெளியான முக்கிய அறிவிப்பு!
சென்னை:நாளை (பிப்ரவரி 1 ஆம் தேதி) முதல் கடற்கரைகளுக்கு பொதுமக்கள் செல்லலாம் என சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.
சென்னையில் உள்ள கடற்கரைக்கு செல்ல நாளை (பிப்ரவரி 1 ஆம் தேதி) முதல் பொதுமக்களுக்கு அனுமதி என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.அதன்படி, மெரினா,பெசன்ட் நகர் உள்ளிட்ட கடற்கரைகளுக்குச் செல்ல விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டு,நாளை முதல் பொதுமக்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
கொரோனா பரவல் அதிகரித்து காணப்பட்டதன் காரணமாக,தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு,ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு மற்றும் கொரோனா கட்டுப்பாடுகள் போன்றவை அமல்படுத்தப்பட்டிருந்தன.மேலும்,கடற்கரைகளுக்கு செல்ல ஜன.31 ஆம் தேதி (இன்று) வரை தடை விதிக்கப்பட்டுள்ளது.ஆனால், தற்போது,கொரோனா பரவல் சற்று குறைந்துள்ளதால் தமிழகத்தில் பிறப்பிக்கப்பட்ட இரவு ஊரடங்கு,முழு ஊரடங்கு ரத்து செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில்,சென்னையில் உள்ள கடற்கரைகளுக்கு பொதுமக்கள் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.எனினும்,கடற்கரையில் மக்கள் கூட்டமாக கூடக் கூடாது,மாஸ்க் அணிந்து விதிகளை கடைப்பிடிக்க வேண்டும் எனவும் மாநகராட்சி தரப்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.