வடகிழக்கு பருவமழை விலகியது – வானிலை ஆய்வு மையம்

Default Image

தொடர்ந்து பெய்து வந்த வடகிழக்கு பருவமழை விலகி உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,  வடகிழக்கு பருவமழையானது தமிழகம், கேரளா, ஆந்திர, தெற்கு உள் கர்நாடகா பகுதிககளிலிருந்து இன்று விலகியது.அடுத்து வரும் 24 மணி நேரத்திற்கு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வறண்ட வானிலையே நிலவும்.

20-01-2021 மற்றும் 21.01.2021 தேதிகளில் இலங்கைக்கு கிழக்கே நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தென் தமிழக கடலோர பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மழையும், ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையும் நிலவக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளைப் பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேக மூட்டத்துடனும், காலை நேரங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 30 குறைந்தபட்ச வெப்பநிலை 22 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

tamil live news
mp sudha anbumani
Jayalalithaa and pm modi
nzvsban
vidaamuyarchi ott release date
kaliyammal tvk
anbumani sekar babu