7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு…!மீனவர்களுக்கு சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை ….!
தமிழகம் மற்றும் புதுச்சேரி கடலோர மாவட்டங்களில் இன்று மாலை முதல் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில், கடலூர், நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. நாளை மற்றும் நாளை மறுநாள் உள்மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. நாளை மற்றும் நாளை மறுநாள் தென்மேற்கு வங்கக் கடல் பகுதிக்கு செல்ல வேண்டாம் என மீனவர்களுக்கு வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.