மிக்ஜாம் புயலால் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் கனமழை பெய்தது. இதன்காரணமாக சென்னை பெரிய அளவிலான பாதிப்பை சந்தித்தது. பெரும்பாலான பகுதிகளில் மழைநீர் கடல் போல தேங்கி நின்றதால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்புக்குள்ளானது.
மாநகராட்சி பணியாளர்கள் மற்றும் மீட்புக்குழுவினர் வெள்ளப்பாதிப்பை சீர்படுத்தும் பணியில் ஈடுபட்டு வந்தனர். பல பகுதிகளில் வெள்ளநீர் வடிந்து இயல்புநிலை திரும்பினாலும், சில இடங்களில் இன்னும் வெள்ளநீர் வடியாமலே இருக்கிறது.
எண்ணூர் எண்ணெய் கழிவு.. சிபிசிஎல் நிறுவனமே காரணம்.! வெளியான அதிர்ச்சி தகவல்கள்..
இந்த நிலையில், கடந்த 7-ஆம் தேதி, மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அவர்கள், ஹெலிகாப்டர் மூலம் சென்னை , செயல்பட்டு, காஞ்சிபுரம் பகுதியில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்தார்.
இந்த நிலையில், மத்திய அரசு மிக்ஜாம் புயல், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தமிழ்நாட்டுக்கு நிவாரண நிதியாக ரூ.450 கோடி ஒதுக்கீடு செய்தது. இந்த நிலையில், தற்போது சென்னையில் புயல் பாதிப்பு தொடர்பாக தலைமை செயலகத்தில் தலைமை செயலாளருடன் 6 பேர் கொண்ட மத்திய குழு ஆலோசனை மேற்கொண்டது.
இந்த ஆலோசனை கூட்டத்தில், வருவாய்துறை, நிதித்துறை உள்ளிட்ட துறைகளின் செயலாளர்கள் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர். இதனை தொடர்ந்து இரண்டு குழுக்களாக பிரிந்து வட மற்றும் தென்சென்னை பகுதிகளில் மத்திய குழுவினர் ஆய்வு செய்யவுள்ளனர்.
நைரோபி : அமெரிக்க முன்வைத்த குற்றச்சாட்டால் அதானி நிறுவனப் பங்குகள், நேற்று பங்குச்சந்தையில் கடும் சரிவைக் கண்டது. இதன் விளைவாக…
திண்டுக்கல் : விசிக தலைவர் திருமாவளவன் இன்று தனது கட்சி நிர்வாகிகள் முன்னிலையில் பல்வேறு கருத்துக்களை கூறினார். தமிழக அரசியலில்…
நியூ யார்க் : அமெரிக்க விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் மற்றும் விண்வெளி வீரர் புட்ச் வில்மோர் ஆகிய இருவரும் நாசா…
கடந்த 2023 அக்டோபர் மாதம் முதல் ஹமாஸ் அமைப்பு - இஸ்ரேல் போர் தீவிரமடைந்து தற்போது வரை காசாவில் பல்லாயிரக்கணக்கான…
சென்னை :கேரளா ஸ்டைலில் காரசாரமான நாவூறும் சுவையில் சம்மந்தி செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான…
டெல்லி : அமெரிக்க வழக்கறிஞர்கள், இந்திய தொழிலதிபர் கெளதம் அதானி மீது இன்று ஒரு பரபரப்பு குற்றசாட்டை முன்வைத்துள்ளனர். அவர்…