தமிழகம் வந்த மத்திய குழு – சென்னையில் ஆய்வு..!

Chennai Flood - Pallikaranai

மிக்ஜாம் புயலால் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் கனமழை பெய்தது. இதன்காரணமாக சென்னை பெரிய அளவிலான பாதிப்பை சந்தித்தது. பெரும்பாலான பகுதிகளில் மழைநீர் கடல் போல தேங்கி நின்றதால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்புக்குள்ளானது.

மாநகராட்சி பணியாளர்கள் மற்றும் மீட்புக்குழுவினர் வெள்ளப்பாதிப்பை சீர்படுத்தும் பணியில் ஈடுபட்டு வந்தனர். பல பகுதிகளில் வெள்ளநீர் வடிந்து இயல்புநிலை திரும்பினாலும், சில இடங்களில் இன்னும் வெள்ளநீர் வடியாமலே இருக்கிறது.

எண்ணூர் எண்ணெய் கழிவு.. சிபிசிஎல் நிறுவனமே காரணம்.! வெளியான அதிர்ச்சி தகவல்கள்..

இந்த நிலையில், கடந்த 7-ஆம் தேதி, மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அவர்கள், ஹெலிகாப்டர் மூலம் சென்னை , செயல்பட்டு, காஞ்சிபுரம் பகுதியில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்தார்.

இந்த நிலையில், மத்திய அரசு மிக்ஜாம் புயல், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தமிழ்நாட்டுக்கு நிவாரண நிதியாக ரூ.450 கோடி ஒதுக்கீடு செய்தது. இந்த நிலையில், தற்போது சென்னையில் புயல் பாதிப்பு தொடர்பாக தலைமை செயலகத்தில் தலைமை செயலாளருடன் 6 பேர் கொண்ட மத்திய குழு   ஆலோசனை மேற்கொண்டது.

இந்த ஆலோசனை கூட்டத்தில்,  வருவாய்துறை, நிதித்துறை உள்ளிட்ட துறைகளின் செயலாளர்கள் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர். இதனை தொடர்ந்து இரண்டு குழுக்களாக பிரிந்து வட மற்றும் தென்சென்னை பகுதிகளில் மத்திய குழுவினர் ஆய்வு செய்யவுள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்