கிராமங்களில் இணைய வசதி.! மத்திய அரசுக்கு வேண்டுகோள் வைத்த அமைச்சர் அன்பில் மகேஷ்.!
கிராமப்புறங்களிலும் இணையம் வசதியை மேம்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அமைச்சர் அன்பில் மகேஷ்.
தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் இன்று தஞ்சாவூரில் செய்தியாளர்கள் சந்திப்பில் மாணவர்களுக்கான இணைய வசதிகள் பற்றி பேசினார். மத்திய அரசுக்கு கோரிக்கையையும் முன் வைத்தார்.
கிராமப்பகுதிகளில் இணையவசதி :
அவர் கூறுகையில், தற்போது இணைய வசதியை மத்திய அரசு அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதனை கிராம பகுதிகளுக்கும் துரிதமாக அனைவருக்கும் இணையவசதி கிடைக்கும் வகையில் மத்திய அரசு வழிவகை செய்யவேண்டும்.
ஸ்மார்ட் கிளாஸ் :
தற்போது கல்வி புரட்சி 4.0 நடைமுறையில் இருக்கிறது. கரும்பலகையில் தொடங்கி தற்போது ஸ்மார்ட் கிளாஸ் மூலம் பாடம் எடுக்கும் வசதி வரை வளர்ந்துவிட்டோம். அதற்கேற்றாற் போல கிராமப்புறங்களிலும் தடையில்லா இணையம் வசதி கிடைக்க வேண்டும் என கூறினார்.
நூலகங்களில் வைஃபை :
மேலும் , இதில் தமிழக அரசின் சார்பில், தமிழகத்தில் பல்வேறு நூலகங்களில் வைஃபை வசதி வைக்கப்பட்டுள்ளது. என்பதையும் அமைச்சர் அன்பில் மகேஷ் செய்தியாளர்களிடம் குறிப்பிட்டார்.