பேரிடர் நிவாரணத்திற்கு போதுமான நிதியை மத்திய அரசு வழங்க வேண்டும்.!
துணை முதல்வரும், நிதியமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் பட்ஜெட்டை தாக்கல் செய்து வருகிறார். அப்போது, மாநில பேரிடர் நிவாரணத்திற்கு மத்திய அரசின் பங்கு போதுமான அளவில் இல்லை மாநில அரசு ரூ.11,943 கோடி செலவில் கட்டப்பட்ட நிலையில் மத்திய அரசு ரூ.1020 கோடி நிதி மட்டும் ஒதுக்கீடு செய்துள்ளது. பேரிடர் நிவாரணத்திற்கு போதுமான நிதியை மத்திய அரசு வழங்க வேண்டும் என அவர் தெரிவித்தார்.