மத்திய அரசு கூடுதல் நிதியுதவி வழங்க வேண்டும் – பாமக நிறுவனர் ராமதாஸ்
புயல் பாதிப்புகளை சரி செய்ய மத்திய அரசு கூடுதல் நிதியுதவி வழங்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பாமக நிறுவனர் ராமதாஸ், தமிழ்நாட்டில் புரெவி, நிவர் புயல் பாதிப்புகளுக்கு ரூ.286.91 கோடி நிதியுதவியை மத்திய அரசு அறிவித்துள்ளது. அடுத்தடுத்து தாக்கிய இரு புயல்களால் தமிழகத்தின் பெரும்பான்மையான மாவட்டங்கள் மிகக்கடுமையாக பாதிக்கப்பட்ட நிலையில், அவற்றை சரி செய்ய இந்த உதவி போதுமானதல்ல.
இதனிடையே, புரெவி, நிவர் புயல் பாதிப்புகளை சரி செய்ய தமிழக அரசின் சார்பில் ரூ.5264.38 கோரி நிதியுதவி கோரப்பட்டிருந்தது. ஆனால், அதில் 5 விழுக்காடு மட்டுமே நிவாரணமாக வழங்கப்பட்டுள்ளது. புயல் பாதிப்புகளை சரி செய்ய மத்திய அரசு கூடுதல் நிதியுதவி வழங்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
புரெவி, நிவர் புயல் பாதிப்புகளை சரி செய்ய தமிழக அரசின் சார்பில் ரூ.5264.38 கோரி நிதியுதவி கோரப்பட்டிருந்தது. ஆனால், அதில் 5 விழுக்காடு மட்டுமே நிவாரணமாக வழங்கப்பட்டுள்ளது. புயல் பாதிப்புகளை சரி செய்ய மத்திய அரசு கூடுதல் நிதியுதவி வழங்க வேண்டும்!@CMOTamilNadu
— Dr S RAMADOSS (@drramadoss) February 14, 2021