மத்திய அரசு இப்பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் – டிடிவி தினகரன்
பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலையை மீண்டும் உயர்த்த தொடங்கியிருப்பது கண்டனத்திற்குரியது என டிடிவி தினகரன் ட்வீட்.
விலை உயர்வு
தமிழகத்தில் இன்று பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்ந்து உள்ளது. அதன்படி, சென்னையில் இன்று பெட்ரோல் லிட்டருக்கு 76 காசுகள் உயர்ந்து 102.58 ரூபாய்க்கும், டீசல் லிட்டருக்கு 77 காசுகள் உயர்ந்து 92.65 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் விலை 50 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது.
டிடிவி தினகரன் ட்வீட்
இந்த விலை உயர்வை கண்டித்து டிடிவி தினகரன் அவர்கள் ட்வீட் செய்துள்ளார். அந்த ட்விட்டர் பதிவில், ‘பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலையை மீண்டும் உயர்த்த தொடங்கியிருப்பது கண்டனத்திற்குரியது. இந்த விலை உயர்வால் நாட்டின் பொருளாதாரம் மட்டுமன்றி, ஒவ்வொரு வீட்டின் பொருளாதாரமும் பாதிக்கப்படும். எனவே, மத்திய அரசு இப்பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும்.
பெட்ரோலிய பொருட்கள் மற்றும் எரிவாயு விலையைத் தீர்மானிக்கும் அதிகாரத்தை எண்ணெய் நிறுவனங்களிடமிருந்து மீண்டும் அரசின் கட்டுபாட்டிற்கே கொண்டு வரவேண்டும்.’ என பதிவிட்டுள்ளார்.
பெட்ரோலிய பொருட்கள் மற்றும் எரிவாயு விலையைத் தீர்மானிக்கும் அதிகாரத்தை எண்ணெய் நிறுவனங்களிடமிருந்து மீண்டும் அரசின் கட்டுபாட்டிற்கே கொண்டு வரவேண்டும். (2/2)
— TTV Dhinakaran (@TTVDhinakaran) March 22, 2022