மாநில அரசுகளிடம் வரிப்பணத்தை பெற்று அதையே மத்திய அரசு திரும்ப தருகிறது என அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.
சென்னை, தலைமை செயலகத்தில் தமிழக நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அவர்கள் செய்தியாளர்களை சந்தித்து பேசியுள்ளார். முதல் முறையாக ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் பங்கேற்றேன். ஜிஎஸ்டி கவுன்சிலில் ஒரு மாநிலத்திற்கு ஒரு வாக்கு என்ற நடைமுறை ஏற்றுக்கொள்ளத்தக்கதாக இல்லை.
மக்கள்தொகை அடிப்படையில், ஜிஎஸ்டி கவுன்சிலில் வாக்கு அளிக்கப்பட வேண்டும். ஜி.எஸ்.டி. வரி முறை அடிப்படை ஆதாரம் இல்லாமல் ஆட்டம் கண்டுதான் உள்ளது. அது முழு ஆய்வு இல்லாமல் கொண்டுவரப்பட்டது. ஜி.எஸ்.டி. வரி முறையில் மாற்றம் கொண்டுவந்தால்தான் அது நீடிக்க முடியும்.
தமிழகம் போன்ற பெரிய மாநிலங்கள் அதிகளவில் வரிப்பணத்தை விட்டு தருகின்றன. அதிக வரி செலுத்தும் மாநிலங்களுக்கு நிதி ஒதுக்கீடு முறையாக இல்லை என குற்றம் சாட்டியுள்ளார். மேலும், பெரிய மாநிலங்களில் இருந்து ஈட்டப்படும் வருவாய் சிறிய மாநிலங்களுக்கு அளிக்கப்படுகிறது. மாநிலங்களிடம் இருந்து பெற்று மத்திய அரசு தரும் நிதி தமிழகத்திற்கு 30% அளவுக்கே உள்ளது.
மேலும், கொரோனா சிகிச்சை பொருட்களுக்கு சில மாதங்களாவது வரியை குறைக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டேன். அதிக உற்பத்தி, அதிக நுகர்வு அடிப்படையில் நிதி ஒதுக்கீடு இருக்க வேண்டும் என்று, முதல்வர் வழிகாட்டுதலில் சில கருத்துக்களை எடூர்குறைத்தேன் என்றும்,தமிழகம் போன்ற பெரிய மாநிலங்களுக்கு பேசுவதற்கான போதிய நேரம் வழங்கப்படவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
சென்னை : இன்றைய ஐபிஎல் போட்டியில் எம்.எஸ்.தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், பாட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ்…
சென்னை : இன்று சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் மாவட்ட…
சென்னை : அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் இன்று அதிமுக மாவட்ட செயலாளர் ஆலோசனை கூட்டம் சென்னை ராயப்பேட்டையில்…
இஸ்லாமாபாத் : கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் பரிதாபமாக…
டெல்லி : கடந்த 2023 ஆம் ஆண்டு வெளியான தமிழ் திரைப்படமான பொன்னியின் செல்வன் 2 (PS2) இல் இடம்பெற்ற…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் தகவல் தொழில்நுட்பம் மற்றும் தொழில்துறை தொடர்பான மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்றது.…