“பாசிச போக்கை மத்திய  அரசு கைவிட வேண்டும்” – உதயநிதி ஸ்டாலின்…!

Default Image

ஒளிப்பதிவு திருத்தச்சட்ட மசோதா படைப்பாளிகளின் சுதந்திரத்தை பறிக்கிறது.எனவே,பாசிச போக்கை மத்திய  அரசு கைவிட வேண்டும் என்று எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின் தெரவித்துள்ளார்.

பொதுவாக ஒரு திரைப்படமானது தியேட்டரில் ரிலீஸ் ஆவதற்கு முன்பு தணிக்கை குழுவிடம் சான்றிதழ் பெறுவது வழக்கம்.ஆனால்,இந்த நடைமுறையில் புதிய ஒளிப்பதிவு திருத்த மசோதாவை மத்திய அரசின் ஐ.டி குழு அறிமுகப்படுத்தவுள்ளது.அதற்காக,தற்போது இந்த மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த புதிய சட்டத் திருத்தப்படி,அரசின் கொள்கைகளுக்குள் ஒரு திரைப்படம் இல்லை என்றால் அதில் மத்திய அரசு தலையிடவும், மேலும்,தணிக்கை குழு வழங்கிய சான்றிதழை ரத்து செய்யவும் அரசிற்கு அதிகாரம் உண்டு.

எனினும்,இந்த மசோதாவை அமல்படுத்துவதற்கு முன்பாக பொதுமக்களிடம் கருத்து கேட்பதற்காக கடந்த சில நாட்களுக்கு முன்பு மத்திய அரசு சார்பில் கால அவகாசம் கொடுக்கப்பட்டது.அதற்கான கடைசி நாள் நேற்றுடன் முடிவடைந்து விட்டது.

இதனையடுத்து,இந்த புதிய ஒளிப்பதிவு சட்ட திருத்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து நடிகர் சூர்யா,அவரைத் தொடர்ந்து கார்த்தி,இயக்குநர் வெற்றிமாறன்,ராஜூ முருகன்,கார்த்திக் சுப்புராஜ் உள்ளிட்ட சில திரைப் பிரபலங்கள் தங்களது கருத்துகளை தெரிவித்துனர்.

இந்நிலையில்,ஒளிப்பதிவு திருத்தச்சட்ட வரைவு 2021 படைப்பாளிகளின் சுதந்திரத்தை பறிக்கிறது என்று எம்.எல்.ஏ உதயநிதி ஸ்டாலின் தெரவித்துள்ளார்.

மேலும்,இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியதாவது:

“ஒளிப்பதிவு திருத்தச்சட்ட வரைவு 2021 படைப்பாளிகளின் சுதந்திரத்தை பறிக்கிறது. தணிக்கையான படங்களை குறிப்பிட்ட கால இடைவெளிக்கு பின் மறு தணிக்கை செய்ய வேண்டும் என்பது அரசியல் நோக்கத்தோடு பழிவாங்கலுக்கு வழிவகுக்கும். இந்த பாசிச போக்கை மத்திய  அரசு கைவிட வேண்டும்”,என்று பதிவிட்டுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்