மத்திய அரசு தனது சர்வாதிகார போக்கை கைவிட வேண்டும் -கனிமொழி
உச்ச நீதிமன்றம் தற்காலிகமாக நிறுத்தி வைக்குமாறு அரசை வலியுறுத்தியதன் மூலம் விவசாயிகளுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்துள்ளது என்று கனிமொழி தெரிவித்துள்ளார்.
மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி டெல்லி எல்லைகளில் 40 நாட்களுக்கு மேலாக தொடர்ந்து விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். வேளாண் சட்டங்கள் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் நேற்று வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, வேளாண் சட்டங்களை அமல்படுத்துவதை தற்காலிகமாக நிறுத்தி வைக்க மத்திய அரசு தயாரா? என்று உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்புள்ளது. மத்திய அரசு வேளாண் சட்டங்களை அமல்படுத்துவதை தற்காலிகமாக நிறுத்தினால் நாங்கள் விவசாயிகளுடன் பேச குழு அமைக்கிறோம் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்தது.
இந்நிலையில் இது குறித்து திமுக எம்.பி. கனிமொழி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பதிவில் , உச்ச நீதிமன்றம், இன்றைய விசாரணையின் போது இந்த கடுமையான வேளாண்மைச் சட்டங்களை தற்காலிகமாக நிறுத்தி வைக்குமாறு அரசை வலியுறுத்தியதன் மூலம் விவசாயிகளுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்துள்ளது.இந்த பிரச்சினைக்கு தீர்வு காண முயலாமல் தனது முடிவில் பிடிவாதமாக இருப்பது ஏன் என்ற நீதிபதிகளின் கேள்வி மத்திய அரசு தனது சர்வாதிகார போக்கை கைவிட வேண்டும் என்பதையே காட்டுகிறது என்று தெரிவித்துள்ளார்.
இந்த பிரச்சினைக்கு தீர்வு காண முயலாமல் தனது முடிவில் பிடிவாதமாக இருப்பது ஏன் என்ற நீதிபதிகளின் கேள்வி மத்திய அரசு தனது சர்வாதிகார போக்கை கைவிட வேண்டும் என்பதையே காட்டுகிறது. (2/3)#SupremeCourt #farmersprotest #FarmLaws #DMKforFarmers
— Kanimozhi (கனிமொழி) (@KanimozhiDMK) January 11, 2021