மத்திய அரசு தமிழ் மீது பாசம் காட்டுவதைப் போல் பாசாங்கு செய்கிறது – ஸ்டாலின்..!
திமுக தலைவர் மு.கஸ்டாலின் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், இந்தி மொழிகள் ஆய்வுக்கான நிறுவனத்தை பாரதிய பாஷா விஸ்வ வித்யாலயா என பெயர் சூட்டி அத்துடன் சென்னையில் உள்ள செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தை திட்ட மத்திய பாஜக அரசு முடிவு செய்துள்ளது. ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் சென்னையில் செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனம் உருவாக்கப்பட்டது.
அதிமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகும்- பாஜக மத்தியில் ஆட்சிக்கு வந்த பிறகு இந்த நிறுவனம் அனைத்து வழிகளிலும் திட்டமிட்டு முடக்கப்பட்டது. தமிழ்மொழி மீது பாசம் காட்டுவதை போல் பாசாங்கு செய்து பல்கலைக்கழகத்தில் ‘துறை’ என்ற அளவில் சுருக்கி சிறுமைப்படுத்தும் உள்நோக்கத்துடன் நடந்து கொள்வது கடுமையான கண்டனத்துக்குரியது.
சமஸ்கிருதத்தை மட்டும் தனிப்பட்ட முறையில் சீராட்டும் வேடத்தை தமிழ் கூறும் நல்லுலகம் ஒருபோதும் ஏற்றுக் கொள்ளாது. தமிழகத்தின் உயிரோட்டமாக இருக்கும் மொழி உணர்வை மழுங்கச் செய்திடலாம் என்று பாஜக அரசு கனவிலும் எண்ணம் வேண்டாம். முற்போக்குத் தனமான முடிவினை கைவிட வேண்டும். அனைத்து பிரச்சினை அமைதி காப்பது போல் செம்மொழி நிறுவனத்தை கலைக்கும்.
மத்திய பாஜக அரசின் முடிவையும் ஆமோதிக்காமல், முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி உரிய அழுத்தம் கொடுக்க வேண்டும் என ஸ்டாலின் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.