பெட்ரோல், டீசல் வரியில் மத்திய அரசுக்கே பெரும்பங்கு என்று தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், ஒரு லிட்டர் பெட்ரோல், டீசல் மீதான வரி ரூ.12ல் இருந்து ரூ.32 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. ஒரு லிட்டர் பெட்ரோல், டீசல் மீது வரியாக விதிக்கப்படும் ரூ.31.50-ஐ மத்திய அரசே எடுத்துக் கொள்கிறது. மீதமுள்ள 50 பைசாவை மட்டும் அனைத்து மாநிலங்களுக்கும் பிரித்து கொடுக்கிறது என குற்றசாட்டியுள்ளார்.
மேலும், முறைகேடு தவறு, நிர்வாக திறமையின்மை காரணமாக ஒரு லட்சம் கோடி வேறு இடங்களுக்கு சென்றுள்ளது. யாரிடம் இருந்து எடுக்க வேண்டுமோ அவரிடம் எடுத்து, யாருக்கு கொடுக்க வேண்டுமோ அவர்களுக்கு கொடுக்க வேண்டும். தமிழ்நாட்டில் உள்ள 69 பெரிய பொதுத் துறை நிறுவனங்களில் 26 நிறுவனங்கள் நஷ்டத்தில் இயங்குகின்றன என கூறியுள்ளார்.
வளர்ச்சி பெறும் மாநிலங்களின் பட்டியலில் 3வது இடத்தில் இருந்து 11வது இடத்திற்கு தமிழ்நாடு தள்ளப்பட்டுள்ளது. தமிழகத்தில் System தவறாக உள்ளது. நிதிநிலைமை எப்போது சரியாகும் என்பதை தேதி கூற முடியாது. 5 வருடத்தில் சரி செய்யப்படும் என்ற நம்பிக்கை உள்ளது. தேர்தல் வாக்குறுதியை திசைத்திருப்ப இந்த அறிக்கை இல்லை எனவும் தெரிவித்தார்.
மக்களின் தேவையை அறிந்து செயல்படுவோம். வாக்களித்த மக்களின் தேவையை அறிந்து அரசு செயல்படும். திமுக அரசாங்கம் மக்களுடன் இணைந்து செயல்படும். தேர்தல் அறிக்கையில் அளித்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும் என்றும் திருச்சி மாநாட்டில் வெளியிடப்பட்ட தொலைநோக்கு திட்டங்கள் 10 ஆண்டுகளில் நிறைவேற்றப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
சென்னை : இன்று ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அருகே தக்கோலத்தில் உள்ள சி.ஐ.எஸ்.எஃப் பயிற்சி மையத்தில் சி.ஐ.எஸ்.எஃப் 56வது ஆண்டு விழா…
சென்னை : மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அரக்கோணம் அருகே தக்கோலத்தில் நடைபெறும் சி.ஐ.எஸ்.எஃப் 56வது ஆண்டு விழாவில் கலந்து…
சென்னை : விமான நிலையங்கள், துறைமுகங்கள், பல்வேறு தனிநபர் பிரமுகர்கள் என பல்வேறு பாதுகாப்பு பணிகளில் ஈடுபடும் மத்திய தொழிலாக…
சென்னை : மத்திய அரசு அறிமுகம் செய்த தேசிய கல்வி கொள்கை 2020-ஐ பிரதிநிதித்துவப்படுத்தும் பிஎம் ஸ்ரீ திட்டத்தில் தமிழ்நாடு…
சென்னை : மக்களவை தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக கடந்த மார்ச் 5ஆம் தேதி சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்…
ஹைதிராபாத் : தமிழ், தெலுங்கு சினிமா உலகில் பிரபல பின்னணி பாடகியாக இருக்கும் கல்பனா, கடந்த செவ்வாய் கிழமை அதிகமாக…