“பெஞ்சல் புயல் பாதிப்புக்கு இதுவரை மத்திய அரசு எந்த நிதியும் வழங்கவில்லை”..முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு!

பெஞ்சல் புயல் மீட்பு பணிகளுக்கு மத்திய அரசு எந்த நிதியும் கொடுக்கவில்லை என சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார்.

pm modi and mk stalin

சென்னை : சட்டப்பேரவையில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின் பெஞ்சல் புயல் பாதிப்புக்கு இதுவரை எந்த நிதியும் மத்திய அரசு வழங்கவில்லை என்கிற குற்றச்சாட்டை முன் வைத்து பேசினார். இது குறித்து பேசிய அவர் ” பெஞ்சல் புயல் மீட்பு பணிகளுக்கு ரூ. 6,675 கோடி என மதிப்பீடு செய்யப்பட்டு, மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டது. ஆனால் இதுவரை எந்த நிதியும் கொடுக்கவில்லை. எங்களுடைய ஆட்சி காலத்தில் சில திட்டங்களை நிறைவேற்றி இருக்கிறோம். 

அதே சமயம் சில திட்டங்களை நிறைவேற்றமுடியாமலும் இருக்கிறோம். நிதி இல்லாத காரணத்தால் அனைத்து திட்டங்களையும் நிறைவேற்ற முடியவில்லை. கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்ற கருணை மத்திய அரசுக்கு உள்ளது. ஆனால், அதற்கான நிதி தான் இல்லை.

ஒருங்கிணைந்த கல்வித்திட்டத்தின் கீழ் மத்திய அரசு வழங்க வேண்டிய நிதியை வழங்கவில்லை. எத்தனையோ முறை நினைவூட்டி கேட்டிருக்கிறோம். இதுவரை விடுவிக்காத காரணத்தால், மாநில அரசே சொந்த வருவாயை பயன்படுத்தி ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்கி வருகிறது. தமிழக அரசின் நிலை. இன்னொரு பக்கம் நிதி ஒதுக்காமல் மத்திய அரசு தமிழ்நாட்டை தொடர்ந்து வஞ்சித்து வருகிறது” எனவும் மு.க.ஸ்டாலின் பேசினார்.

மேலும் தொடர்ந்து பேசிய அவர் ” மத்திய அரசின் சுரங்க திட்டத்திற்கு ஆதரவு அளித்து துரோகம் இழைத்தது அதிமுக தான். டங்ஸ்டன் திட்டம் வந்தால் நான் முதல்வர் பதவியில் இருக்க மாட்டேன். தொடர்ந்து டங்ஸ்டன் திட்டம் குறித்து மீண்டும் பேசி மக்களை குழப்புகின்றனர். கண்டிப்பாக டங்ஸ்டன் திட்டம் என்பது இங்கு வராது.  உறுதியாக சொல்கிறேன் நான் முதலமைச்சராக இருக்கும் வரை டங்ஸ்டன் திட்டம் வராது ” எனவும்  முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார். 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Gargi Ranpara (8-year) died yesterday morning at a private school in Ahmedabad
heavy rain ALERT
sivasankar dmk tvk vijay
pm modi and mk stalin
tvk vijay about dmk
edappadi palanisamy and mk stalin