தமிழக மீனவர்கள் மீதான தொடர் தாக்குதல் குறித்து மத்திய அரசிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது ..!அமைச்சர் ஓ.எஸ்.மணியன்
தமிழக மீனவர்கள் மீதான தொடர் தாக்குதல் குறித்து மத்திய அரசிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் ஓ.எஸ்.மணியன் தெரிவித்துள்ளார்.
மேலும் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் கூறுகையில்,தமிழக மீனவர்கள் மீதான தொடர் தாக்குதல் குறித்து மத்திய அரசிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழக மீனவர்கள் மீது இலங்கை மீனவர்கள் தான் தாக்குதல் நடத்துகிறார்கள். கடல் எல்லையில் ரோந்து பணியினை துரிதப்படுத்த மத்திய அரசிடம் வலியுறுத்தப்படும் என்றும் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் தெரிவித்துள்ளார்.