சென்னையில் இரண்டடுக்கு பிரமாண்ட மேம்பாலம்.! மத்திய அரசு அனுமதி.!

சென்னை  துறைமுகத்தில் இருந்து மதுரவாயல் வரையில் உயர்மட்ட இரண்டடுக்கு பாலம் கட்டுவதற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. 

சென்னை துறைமுகத்தில் இருந்து மதுரவாயல் வரையில் சுமார் 20 கிமீ தூரத்திற்கு 2 அடுக்கு பாலம் அமைக்க அண்மையில் அடிக்கல் நாட்டப்பட்டது. இதற்காக 5885 கோடி ரூபாய் செலவாகும் என நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது.

இந்த திட்டத்திற்கு தற்போது மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இதன் மூலம் மதுரவாயல் பகுதியில் இருந்து சரக்கு கொள்முதல் வாகனங்கள் எளிதாக போக்குவரத்துநெரிசல் இல்லாமல் துறைமுகம் செல்லும் அதே போல போக்குவரத்து நெரிசல் இல்லாமல் வெளியே வர முடியும்.

இது இரண்டு அடுக்கு பாலமாக பிரமாண்டமாக கட்டமைக்கப்பட்ட உள்ளது. இதில் மேலடுக்கில் துறைமுக வாகனங்களும், கீழடுக்கில் உள்ளூர் வாகனங்களும் செல்லும் என கூறப்பட்டுள்ளது. இந்த பாலமானது கூவம் நதிக்கரையோரம் கட்டமைக்கப்பட உள்ளது. ஏற்கனவே இதற்காக தூண் அமைக்கும் பணிகள் நடைபெற தொடங்கி விட்டன என்பது குறிப்பிடத்தக்து.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்