பாஜக ஆட்சியில் இல்லாத மாநிலங்களில் இடையூறு செய்யவே ஆளுனர் பதவி.! சிபிஐ மாநில செயலாளர் முத்தரசன் குற்றசாட்டு.!
இந்தியாவில் எங்கெல்லாம் பாஜக ஆட்சி அதிகாரத்தில் இல்லையோ, அங்கெல்லாம் ஆளும் மாநில கட்சிகளுக்கு இடையூறு செய்வதற்காகவே ஆளுநர்களை மத்திய அரசு நியமித்து வருகிறது . – சிபிஐ மாநில செயலாளர் முத்தரசன் விமர்சனம்.
இன்று சட்டப்பேரவையில ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழக அரசு கொடுத்த உரையில் ஒரு சில விஷயங்களை பேசாமல் விட்டு குறிப்பிட்ட விஷயங்களை மட்டும் பேசியதற்கு திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளுக்கு இடையே கடும் எதிர்பலையை உண்டாகியுள்ளது.
இது குறித்து, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் கூறுகையில், ‘ இந்தியாவில் எங்கெல்லாம் பாஜக ஆட்சி அதிகாரத்தில் இல்லையோ, அங்கெல்லாம் ஆளும் மாநில கட்சிகளுக்கு இடையூறு செய்வதற்காகவே ஆளுநர்களை மத்திய அரசு நியமித்து வருகிறது .
இவர்களின் வேலை போட்டி அரசாங்கம் நடத்துவது, மாநில அரசுகள் கொண்டுவரும் திட்டங்களுக்கு இடையூறு வழங்குவது. ஆளுநர் பதவி வேண்டாம் என்பது தான் இந்திய கம்யூனிஸ்ட் , மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், மற்ற இதர கட்சிகளின் விருப்பமாகும். ‘ எனவும் முத்தரசன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.