சின்ன குழந்தைகளுக்கு சொல்வது போல் மத்திய அரசு அறிவித்துள்ளது – திருச்சி சிவா

Default Image

மத்திய பட்ஜெட் தாக்கலில் கவர்ச்சி திட்டங்களை மட்டுமே மத்திய பாஜக அரசு அறிவித்திருப்பதாகவும், வேலைவாய்ப்பு குறித்து எந்த திட்டமும் அறிவிக்கவில்லை என்றும் திமுக எம்பி திருச்சி சிவா தெரிவித்துள்ளார்.

டெல்லியில் 2021-22-ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட பிறகு செய்தியாளர்களிடம் பேசிய திமுக எம்பி திருச்சி சிவா, ஏற்கனவே நிதிநிலையில் மிகப்பெரிய பின்னடைவில் இருக்கக்கூடிய இந்தியா, பொருளாதார ஆய்வறிக்கையில் ஜிடிபி மேலும் குறையும் என்று தெரிவித்திருக்கிறார்கள். வேலைவாய்ப்பு இல்லாத சூழ்நிலையில், அதை பெருக்குவதற்கான எந்த திட்டமும் இடம்பெறவில்லை. ஏதோ கவர்ச்சியாக சின்ன குழந்தைகளுக்கு சொல்வது மாதிரி அறிவித்திருக்கிறார்கள்.

இன்று தாக்கல் செய்யப்பட்டதில் நிறைய திட்டங்களுக்கு லட்சம், கோடி கணக்கில் நிதி அறிவித்து இருக்கிறார்களே தவிர, அதற்கான வருவாயை குறித்து எதையும் சொல்லவில்லை. விவசாயிகளுடன் வருமானத்தை இரட்டிப்பு செய்யப்படும் என்று கூறுகிறார்கள். தற்போதுள்ள 150 விழுக்காடுகளுக்கே வழியில்லை, இதில் 200 விழுக்காடுகள் எப்படி சாத்தியமாகும். பட்ஜெட் கூட்டத்தொடரில் நாங்கள் எதிர்பார்க்கப்பட்ட ஏதும் நடக்கவில்லை என்று தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்