“மத்திய அரசை,மத்திய அரசு என்றே அழைக்கலாம்” – எடப்பாடி பழனிச்சாமி பதில்…!

Published by
Edison

“மத்திய அரசை,மத்திய அரசு என்றே அழைக்கலாம்” என்று எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமையகத்தில் ஜெயக்குமார் உள்ளிட்ட 9 மாவட்ட செயலாளர்களுடன்,அக்கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி இன்று ஆலோசனை மேற்கொண்டார்.

அதன் பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த எடப்பாடி பழனிச்சாமி கூறியதாவது:-
  • நான் முதல்வராக  இருந்த காலகட்டத்தில் பரிசோதனை நிலையங்கள் அமைக்கப்பட்டன.ஆனால் தற்போது தமிழகத்தில் இருக்கும் பரிசோதனை நிலையங்களின் எண்ணிக்கை போதாது.
  • கடந்த ஆட்சியில் 24 மணி நேரமும் கொரோனா பரிசோதனை முடிவுகள் தெரிவிக்கப்பட்டு வந்தது. தற்போது பரிசோதனை முடிவுகள் வெளியிடுவதில் தாமதம் ஏற்படுகிறது.இதனால் நோய் பரவல் அதிகரிக்கிறது.
  • அதேபோன்று கடந்த ஆட்சியில் வீடுவீடாக சென்று பொதுமக்களை சந்தித்து,நோய் அறிகுறிகள் இருக்கிறதா? என்பதை கண்டறியும் சோதனைகள் நடைபெற்றது. ஆனால்,தற்போது பொதுமக்களை சந்தித்து நோய் அறிகுறிகள் இருப்பவர்களின் கணக்குகள் எடுக்கப் படவில்லை என்ற தகவல்கள் வருகிறது.
  • தமிழகத்திற்கு அதிக அளவில் தடுப்பூசியை வழங்க வேண்டும் என பிரதமர் மோடியை கேட்டுக் கொண்டிருக்கிறேன்.ஏற்கனவே தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகமாக இருப்பதால் தமிழகத்திற்கு கூடுதல் தடுப்பூசிகளை ஒதுக்கீடு செய்ய வேண்டும் எனவும் கேட்டுக் கொள்கிறேன்.
  • அரசியலை விட்டே விலகுவதாக அறிவித்து விட்ட சசிகலாவின் பெயரில், வேண்டுமென்றே குழப்பத்தை விளைவிப்பதாக ஆடியோ வெளியிடப்படுகிறது.
  • இன்று அதிமுக பலம்வாய்ந்த எதிர்க்கட்சியாக இருந்து வருகிறது. இதில் சிலர் குழப்பத்தை ஏற்படுத்த முயற்சி செய்கின்றனர். அது ஒருபோதும் நடக்காது.
  • மேலும்,சென்னையில் புது வீட்டுக்கு இடம் பெயர்ந்ததால் ஆலோசனைக் கூட்டத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் பங்கேற்கவில்லை என்று கூறினார்.

இதனையடுத்து,செய்தியாளர்கள்,மத்திய அரசை,ஒன்றிய அரசு என்று தான் அழைக்க வேண்டும் என்று கருத்து தற்போது அதிகமாக வலுக்கிறது. இதற்கு  உங்களுடைய கருத்து என்ன? என்று கேள்வி எழுப்பினர்.

அப்போது பதிலளித்த எடப்பாடி பழனிசாமி,”பொது மக்களின் கருத்து என்னவோ அதற்கு முக்கியத்துவம் அளிப்போம்.தற்போது பொதுமக்கள் மத்திய அரசு, மாநில அரசு என்று தான் அழைக்கிறார்கள்.அதனால் மத்திய அரசு என்றே அழைக்கலாம்”, என்றார்.

Published by
Edison

Recent Posts

பூமிக்கு திரும்பும் சுனிதா வில்லியம்ஸ் : நாளை விண்ணில் பாய்கிறது எலான் மஸ்கின் க்ரூ டிராகன்!

பூமிக்கு திரும்பும் சுனிதா வில்லியம்ஸ் : நாளை விண்ணில் பாய்கிறது எலான் மஸ்கின் க்ரூ டிராகன்!

வாஷிங்டன் : அமெரிக்க விண்வெளி வீரர்களான சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் ஆகியோர் கடந்த வருடம் ஜூன் மாதம் ஸ்டார்…

1 hour ago

“இதற்காகவே நாங்கள் பெரியாரை கொண்டாடுகிறோம்” நிர்மலா சீதாராமனுக்கு பதில் கொடுத்த விஜய்!

சென்னை : பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாம் கட்ட அமர்வு டெல்லி நாடாளுமன்றத்தில் நேற்று முன்தினம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த…

2 hours ago

இது எங்க காலம்.! ஐசிசி தரவரிசையில் எகிறி அடிக்கும் இந்திய கிரிக்கெட் வீரர்கள்!

டெல்லி : அண்மையில் பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபியை கைப்பற்றிய கொண்டாட்டத்தில் இந்திய அணி வீரர்கள் இருக்கும்…

3 hours ago

30 பேர் சுட்டுக்கொலை! 190 பேர் மீட்பு! மற்றவர்கள் நிலை? பாக். ரயில் கடத்தல் அப்டேட்…

இஸ்லாமாபாத்  : பாகிஸ்தானில் பலுசிஸ்தான் மாகாண தலைநகர் குவெட்டாவிலிருந்து வடக்கு நகரமான பெஷாவருக்கு சென்று கொண்டிருந்த பயணிகள் ரயிலை நேற்று…

4 hours ago

யாருக்கு அறிவில்லை? அமைச்சர் பி.டி.ஆர் vs அண்ணாமலை வார்த்தை போர்!

சென்னை : தேசிய கல்வி கொள்கையை ஆதரிக்கும் வகையில் உள்ள PM Shri திட்டத்தில் தமிழகத்தை இணைக்க மத்திய அரசு…

5 hours ago

மார்ச் 22-ஐ குறிவைத்து காத்திருக்கும் திமுக! பல்வேறு மாநில ஆளும்கட்சி, எதிர்க்கட்சிகளுக்கு அழைப்பு!

சென்னை : மக்கள் தொகை அடிப்படையில் மக்களவை தொகுதிகள் மறுசீரமைப்பு செய்யப்பட உள்ளதாக திமுக தொடர்ந்து கூறிவருகிறது. இந்த தொகுதி…

6 hours ago