இரண்டு நாட்களாக மழை பாதிப்புகளை ஆய்வு செய்த மத்தியக்குழு இன்று முதலமைச்சரை சந்தித்து ஆலோசனை..!
இரண்டு நாட்களாக மழை பாதிப்புகளை ஆய்வு செய்த மத்தியக்குழு இன்று முதலமைச்சரை சந்தித்து ஆலோசனை.
தமிழகத்தில் பருவமழை தொடங்கியுள்ள நிலையில், கடந்த சில வாரங்களாக பல மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால், பல இடங்களில் மழைநீர் தேங்கி உள்ளதாலும், வீடுகளுக்குள் மழைநீர் புகுந்ததாலும் மக்களின் இயல்பு வாழ்க்கை பெருமளவில் பாதிப்புக்குள்ளாகி உள்ளது.
இந்நிலையில், கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பதாக தமிழகத்தில் பாதிப்புகளை ஆய்வு செய்ய மத்திய குழு வருகை புரிந்தது. அதன்படி, தமிழகத்தில் ஏற்பட்ட பாதிப்புகளை கடந்த இரண்டு நிலையில், இன்று முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து ஆலோசனை மேற்கொள்ள உள்ளனர். இந்த சந்திப்பின் போது, முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள், உரிய நிதியை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்தியக்குழுவிடம் வலியுறுத்தவுள்ளார்.