தமிழக அரசை பாராட்டிய மத்திய குழு..!
மிக்ஜாம் புயல் – கனமழை காரணமாக சென்னை , காஞ்சிபுரம், செங்கல்பட்டு,திருவள்ளூர் ஆகிய மாவட்ட பகுதிகள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெருமளவில் பாதிக்கப்பட்டது. ஒரு சில பகுதிகளில் இன்னும் தேங்கிய மழைநீரை வெளியேற்றும் பணி தொடர்கிறது.
இதனை தொடர்ந்து, மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கடந்த சில தினங்களுக்கு முன்னர் சென்னை வந்து வெள்ள பாதிப்புகளை ஹெலிகாப்டரில் ஆய்வு செய்தார். அதன்படி, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களை ஆய்வு செய்வதற்காக மத்திய குழு சென்னை வந்தது.
இந்த நிலையில், கடந்த 2 தினங்களாக வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை மத்திய குழு ஆய்வு செய்தது. தமிழக அரசு வெள்ள பாதிப்பு சமயத்தில் சிறப்பான நடவடிக்கையை மேற்கொண்டது எனவும், 2015ஐ காட்டிலும் மழை வெள்ள பாதிப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் இந்த முறை சிறப்பாக இருந்ததாகவும், அதானல் பெரிய அளவிலான சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது. பெரிய அளவிலான உயிர்சேதமும் தவிர்க்கப்பட்டது என பாராட்டினர்.
தமிழகத்தில் 20 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்து உத்தரவு!
இரண்டு நாள் வெள்ள பாதிப்பு பகுதிகளை ஆய்வு செய்த மத்திய குழுவானது இன்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உடன் ஆலோசனை மேற்கொண்டனர். தமிழ்நாடு அரசு “மிக்ஜாம்” புயலால் ஏற்பட்ட பெருமழையினை எதிர்கொண்டு, மேற்கொண்ட நிவாரணப் பணிகள் அனைத்தும் மிகுந்த பாராட்டுக்குரியவை என்று மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு மு.க ஸ்டாலின் அவர்களுடன் இன்று தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் ஒன்றியக் குழுவின் தலைவர் திரு குணால் சத்யாத்திரி அவர்கள் தெரிவித்துள்ளார்.
மிக்ஜாம் புயல் ஏற்படுத்திய பெருமழையால் பாதிக்கப்பட்ட சென்னை உட்பட மாவட்டங்களையும் பார்வையிட்டு ஆய்வு செய்துள்ளோம் ஆய்வுப் பணிகள் மேற்கொண்டதில் எங்களுக்கு மனநிறைவு ஏற்பட்டுள்ளது. இந்திய வானிலை ஆய்வு மையம் புயல் எச்சரிக்கையை முன்கூட்டியே வெளியிட்டதன் அடிப்படையில் தமிழ்நாடு அரசு தகுந்த அறிவியல்பூர்வமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு செம்பரம்பாக்கம் ஏரியை திறந்துவிட்டதனால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது என பாராட்டியுள்ளனர்.