ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருப்பது என்பது உண்மை என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
ஜெயலலிதா மரணம் தொடர்பாக அமைச்சர் சி.வி.சண்முகம் கூறுகையில், ஜெயலலிதா சிகிச்சை பெற்ற போது எங்களை யாரும் பார்க்க அனுமதிக்கவில்லை.மருத்துவமனையில் ரூ 1 கோடிக்கும் மேல் உணவு சாப்பிட்டது யார்? ..மருத்துவமனையை உல்லாசவிடுதியாக்கி தங்கி ரூ.1 கோடிக்கு மேல் இட்லி, தோசை சாப்பிட்டது சசிகலா குடும்பம் .சசிகலா தவிர அவரது குடும்பத்தினர் அனைவரையும் ஜெயலலிதா ஒதுக்கி வைத்திருந்தார்.
ஜெயலலிதாவை வெளிநாட்டிற்கு அழைத்து சென்று சிகிச்சை அளிப்பதை தடுத்திருக்கிறார்கள். ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருப்பது உறுதியாகி உள்ளது.
ஜெயலலிதா மரணம் குறித்து அரசு, சிறப்பு விசாரணை குழு அமைத்து விசாரிக்க வேண்டும். சந்தேகத்திற்கு இடமான மரணம் என வழக்குப்பதிவு செய்து, சம்பந்தப்பட்டவர்களை விசாரிக்க வேண்டும் என்றும் அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்தார்.
இந்நிலையில் இது தொடர்பாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கருத்து தெரிவித்துள்ளார்.அவர் கூறுகையில்,ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருப்பது என்பது உண்மை. சட்டத்துறை அமைச்சரே கூறியதால் சொல்கிறேன், சிபிஐ விசாரணை நடத்தினால் உண்மை வெளிவரும். ஆறுமுகசாமி ஆணைய விசாரணையில் உண்மை வெளிவராது என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த…
தூத்துக்குடி : சென்னையில் உள்ள அண்ணா பல்கலைகழகத்தில் மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில்…
சென்னை :முளைக்கட்டிய பச்சைபயிறு முட்டை மசாலா செய்வது எப்படி இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருள்கள்; முளைகட்டிய பச்சைப்பயிறு-…
இலங்கை : தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடித்ததால் இலங்கை கடற்படையினர் கைது செய்தனர், மீனவர்கள் தடை செய்யப்பட்ட வலைகளை…
சென்னை : அண்ணா பல்கலைகழகத்தில் மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்…
சென்னை : அண்ணா பல்கலைகழகத்தில் மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்…