இன்று பாபர் மசூதி இடிப்பு வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டது. இந்த வழக்கில், பாபர் மசூதி இடிப்பு என்பது முன்கூட்டியே திட்டமிடப்பட்டது அல்ல, அத்வானி உள்ளிட்ட குற்றம் சாட்டப்பட்டவர்கள் பாபர் மசூதி இடிப்பிற்கு காரணமானவர்கள் என சிபிஐயால் நிரூபிக்க முடியவில்லை. சிபிஐ வழங்கிய ஒளி மற்றும் ஒலி ஆதாரங்களின் நம்பகத்தன்மையை நிரூபிக்க இயலவில்லை.
அத்வானி, முரளி மனோகர் ஜோஷி உள்ளிட்டோர் பாபர் மசூதி இடிப்பை தடுக்க முயன்றனர். எனவே பாபர் மசூதி இடிப்பு வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட அனைவரும் விடுதலை செய்யப்படுவதாக தீர்ப்பு வழங்கப்பட்டது.
இந்நிலையில், பாபர் மசூதி இடிப்பு வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பிற்கு பல தலைவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், திமுக தலைவர் மு.க ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், மொத்த மசூதியும் திட்டமிட்ட நடவடிக்கைகள் மூலம் இடித்து தள்ளப் பட்டுள்ளது என்று உச்சநீதிமன்றமே தீர்ப்பளித்த பிறகும் குற்றச்சதியை நிரூபிக்க முடியாமல் சிபிஐ தோற்றிருக்கிறது.
மசூதி மட்டுமல்ல எந்த ஒரு மத வழிபாட்டுத் தலத்தையும் ஆக்கிரமிப்பதும், அழிப்பதும் அநியாயம்; சட்டவிரோதம்.! உலக நாடுகள் மத்தியில் இந்தியாவின் நன்மதிப்பைச் சீர்குலைத்த பாபர் மசூதி இடிப்பு வழக்கில் நடுநிலையுடனும், நியாயமாகவும் சிபிஐ செயல்பட்டிருக்க வேண்டும். அப்படிச் செயல்பட ஏனோ தவறி பாஜக அரசின் கூண்டுக்கிளியாக ஆக மாறிவிட்டது வெட்கக்கேடானது.
அரசியல் சட்டத்திற்கு நெருக்கடியை உருவாக்கி முக்கிய வழக்கில் பொறுப்பில்லாமல் சிபிஐ செயல்பட்டு தனது கடமைகளைத் துறந்திருப்பது, நீதியின் பாதையில் நீண்டகால விளைவுகளை ஏற்படுத்திவிடும் என தெரிவித்துள்ளார்.
டெல்லி : ஐபிஎல் தொடரில் புதிய வீரர்களை இணைக்க பிசிசிஐ அனுமதி வழங்கியுள்ளது. ஐபிஎல் தொடர் ஒரு வாரம் ஒத்திவைக்கப்பட்டதால்…
டெல்லி : மத்தியப் பிரதேச அமைச்சர் குன்வர் விஜய் ஷாவின் சகோதரி கர்னல் சோபியா குரேஷிக்கு எதிராக பயங்கரவாதிகளின் கருத்தை…
சென்னை : வக்ஃப் மசோதா வழக்கில் நீதிமன்றத்தின் இடைக்கால நடவடிக்கையில் தவெக முக்கிய பங்காற்றியது என்றும், சிறுபான்மையினர் உரிமைகளை காக்கும்…
ஒடிசா : இந்தியாவின் டிரோன் எதிர்ப்பு ராக்கெட் ''பார்கவஸ்த்ரா'' ஒடிசாவின் கோபால்பூரில் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது. குறைந்த செலவில் SDAL நிறுவனம்…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், எந்த கட்சிகள் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்க போகிறது என்பதற்கான எதிர்பார்புகள்…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தமிழக கடலோரப்பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி…