குட்கா முறைகேடு வழக்கு.! தவறுகளை திருத்த சிபிஐக்கு கூடுதல் அவகாசம் வழங்கியது நீதிமன்றம்.!

Default Image

குட்கா முறைகேடு தொடர்பாக பிழைகளை திருத்த கூடுதல் அவகாசம் வேண்டும் என சிபிஐ வைத்த கோரிக்கையை ஏற்று சிபிஐ நீதிமன்றம் கூடுதல் அவகாசம் வழங்கியுள்ளது. 

தமிழகத்தில்  குட்கா போதை பொருட்களுக்கு கடந்த 2015ஆம் ஆண்டு தடை விதித்தது. இந்த தடையை மீறி குட்கா தமிழகத்தில் விரப்பட்டதை தொடர்ந்து , முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர், முன்னாள் டிஜிபி டி.கே.ராஜேந்திரன், சென்னை முன்னாள் போலீஸ் ஆணையர் ஜார்ஜ் உள்ளிட்ட மத்திய, மாநில அரசு அதிகாரிகள் உள்ளிட்ட 11 பேருக்கு எதிராக சிபிஐ வழக்கு தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறது.

இந்த வழக்கு மீதான விசாரணை சென்னை சிபிஐ நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. ஏற்கனவே முதலில், அரசு அதிகாரிகள் 6 பேர் மீது மட்டும் வழக்குபதிவு செய்யப்பட்டது. இந்த வழக்குபதிவை அடுத்து, கூடுதலாக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர், முன்னாள் டிஜிபி டி.கே.ராஜேந்திரன் உள்ளிட்ட மேலும் சிலரை இந்த குற்றப்பத்திரிகையில் சேர்க்க சிபிஐ அனுமதி கூறியிருந்த நிலையில், மேற்கொண்டவர்கள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய தமிழக அரசு அனுமதி வழங்கியது.

இதனை அடுத்து, குட்கா வழக்கு தொடர்பாக சென்னை சிபிஐ நீதிமன்றத்தில் கூடுதலாக குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இந்த குற்றப்பத்திரிகையில் தவறுகள் இருப்பதாகவும், அதனை திருத்த கோரியும் சிபிஐ கோரிக்கை வைத்த இருந்தது.

இதற்கு ஏற்கனவே அவகாசம் கொடுக்கப்பட்ட நிலையில், இன்று மீண்டும் இந்த குட்கா முறைகேடு வழக்கு விசாரணைக்கு வந்ததும், இன்னும் குற்றப்பத்திரிகையில் உள்ள பிழைகளை திருத்தவில்லை. அதனால் கூடுதல் அவகாசம் வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது.  இந்த கோரிக்கையினை ஏற்று தற்போது கூடுதல் குற்றப்பத்திரிகையில் உள்ள பிழைகளை திருத்த கொடுக்கப்பட்ட அவகாசம் தொடர்பாக மீண்டும் கால அவகாசம் அளிக்கப்பட்டு சிபிஐ நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்