சிவசங்கர் பாபாவை சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையிலிருந்து புழல் சிறைக்கு மாற்ற சிபிசிஐடி போலீசார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
சுஷில் ஹரி பள்ளி நிறுவனர் சிவசங்கர் பாபா மீது அப்பள்ளியின் முன்னாள் மாணவிகள் பாலியல் புகார் தெரிவித்ததை தொடர்ந்து,கடந்த சில நாட்களுக்கு முன்பு டெல்லியில் வைத்து போலீசார் கைது செய்தனர்.பின்னர், சிவசங்கர் பாபாவை செங்கல்பட்டு மாவட்ட நீதிமன்றத்தில் சிபிசிஐடி போலீசார் ஆஜர்படுத்தினர்.
இதனையடுத்து,சிவசங்கர் பாபாவை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டு,அவர் செங்கல்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.இதற்கிடையில்,உடல்நிலை பாதிக்கப்பட்ட காரணத்தால் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிக்சைக்காக சிவசங்கர் பாபா அனுமதிக்கப்பட்டார்.
அதன்பின்னர்,சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக பாபா அனுமதிக்கப்பட்டார்.
இந்நிலையில்,மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சிவசங்கர் பாபா டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.இதனால்,அவரை மீண்டும் புழல் சிறையில் அடைப்பதற்காக காவல்துறையினர் அழைத்துச் செல்கின்றனர். .
இதனைத் தொடர்ந்து,சிவசங்கர் பாபாவை காவலில் எடுத்து விசாரணை நடத்துவதற்காக சிபிசிஐடி போலீசார் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பஞ்சாப் : இன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் சண்டிகரில் உள்ள மகாராஜா…
பஞ்சாப் : ஐபிஎல் போட்டிகள் தொடங்கிவிட்டது என்றால் ஒவ்வொரு அணியில் இருக்கும் இளமையான வீரர்கள் தங்களுடைய திறமையை வெளிக்காட்டி பலருடைய…
பஞ்சாப் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் சண்டிகரில் உள்ள மகாராஜா…
சென்னை : காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதியமைச்சருமான ப. சிதம்பரம், இன்று குஜராத் மாநிலம் அகமதாபாத்தில்…
கொல்கத்தா : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா அணியும், லக்னோ அணியும் ஈடன் கார்டன் கிரிக்கே மைதானத்தில் மோதி வருகிறது.…
சென்னை : சென்னை முன்னாள் அதிமுக மேயர் சைதை துரைசாமி இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பல்வேறு விஷயங்களை தெரிவித்தார். …