சிவசங்கர் பாபாவை 10 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க,செங்கல்பட்டு நீதிமன்றத்தில் சிபிசிஐடி போலீசார் மனுதாக்கல் செய்துள்ளனர்.
சுஷில் ஹரி பள்ளி நிறுவனர் சிவசங்கர் பாபா மீது அப்பள்ளியின் முன்னாள் மாணவிகள் பாலியல் புகார் தெரிவித்ததை தொடர்ந்து, நேற்று முன்தினம் டெல்லியில் வைத்து போலீசார் கைது செய்தனர்.
நேற்று சிவசங்கர் பாபாவை செங்கல்பட்டு மாவட்ட நீதிமன்றத்தில் சிபிசிஐடி போலீசார் ஆஜர்படுத்தியுள்ளனர். இதனைத் தொடர்ந்து, சிவசங்கர் பாபாவை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. சிறையிலுள்ள சிவசங்கர் பாபாவை முதற்கட்டமாக போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி போலீசார் திட்டமிட்டுள்ளனர். அதற்கான மனுவை இன்று நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய உள்ளனர்.
இந்நிலையில், பாலியல் புகார் அளித்த மாணவிகள் சிவசங்கர் பாபா அவருடைய அறையில் வைத்து பாலியல் தொல்லை கொடுத்திருக்கிறார் என்ற ஒரு வாக்கு மூலம் அளிக்கப்பட்டு உள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதைத்தொடர்ந்து,நேற்று சிவசங்கர் பாபா நேரடியாக தனது அறையை அடையாளம் காட்டினார். இந்நிலையில், இன்று காலை சிபிசிஐடி போலீசார் சிவசங்கர் பாபா அறையை சோதனை செய்து பின்னர் அறைக்கு சீல் வைத்தனர். சிவசங்கர் பாபா அறையிலிருந்த கணினி ஹார்ட் டிஸ்க்குகளை சிபிசிஐடி போலீசார் கைப்பற்றி ஆய்வு செய்து வருகின்றனர்.
இதற்கிடையில்,சிவசங்கர் பாபாவுக்கு மாரடைப்பு ஏற்பட்டதன் காரணமாக செங்கல்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு,தற்போது அங்கிருந்து ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு அவர் கொண்டு வரப்படவுள்ளார்.
இந்நிலையில்,சிவசங்கர் பாபாவை 10 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க,செங்கல்பட்டு நீதிமன்றத்தில் சிபிசிஐடி போலீசார் மனுதாக்கல் செய்துள்ளனர்.
இந்த மனுதாக்கல் விவகாரமானது வரும் திங்கட்கிழமையன்று விசாரணைக்கு வரவுள்ளது.மேலும்,திங்கட்கிழமை பாபாவின் உடல்நிலை பொருத்து,காவலில் எடுத்து விசாரிக்க,சிபிசிஐடிக்கு அனுமதி வழங்கலாமா? அல்லது வேண்டாமா? என்பது குறித்து நீதிபதி முடிவு செய்வார் என்று தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை : வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், நாளை புயலாக உருவாகவுள்ளது. அதன்படி, புயல்…
சென்னை : வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை புயலாக மாறுகிறது. இந்த புயலுக்கு ஃபெங்கல்…
சென்னை :அம்மை நோய் வந்தால் வீட்டில் செய்ய வேண்டியதும் செய்யக்கூடாததையும் பற்றியும் இந்த செய்தி குறிப்பில் தெரிந்து கொள்வோம். அம்மை…
சென்னை : வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை புயலாக மாறும் எனவும், இந்த…
சென்னை : அடுத்த ஆண்டு மார்ச் மாதம் ஐபிஎல் 2025 தொடரானது தொடங்கவுள்ளது. இந்த தொடர் மார்ச்-14 ம் தேதி…
சென்னை : வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், நாளை புயலாக உருமாறும் என வானிலை…