கோடநாடு கொலை வழக்கு.! சசிகலா மற்றும் எடப்பாடி ஜோதிடரை விசாரிக்க சிபிசிஐடி முடிவு.!

கோடாநாடு கொலை கொள்ளை வழக்கு சம்பந்தமாக சசிகலா மற்றும் எடப்பாடி ஜோதிடரிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்த உள்ளனர்.
நீலகிரி மாவட்டம் கோடநாடு பகுதியில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான பங்களாவில் கடந்த 2017ஆம் ஆண்டு நடந்த கொலை கொள்ளை சம்பந்தமாக தீவிர விசாரணை நடைபெற்று வந்தது. அப்போது முக்கிய குற்றவாளியாக கருதப்பட்ட கனகராஜ் என்பவர் ஏப்ரல் 24ஆம் தேதி அவரது சொந்த ஊருக்கு சென்று கொண்டிருக்கையில் மர்மமான முறையில் உயிரிழந்தார். இதனை தொடர்ந்து விசாரணையானது மேலும் தீவிரமடைந்தது.
இந்த கோடநாடு கொலை கொள்ளை வழக்கை சிபிசிஐடி போலீசார் தனிப்படைகள் அமைத்து தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர். தற்போது கனகராஜ் உயிரிழப்பதற்கு முன்னர் காலையில் குடும்பத்துடன் எடப்பாடி சேர்ந்த ஒரு ஜோதிடரை சந்தித்ததாகவும், அவர், கனகராஜூக்கு ஏதோ மிகப்பெரிய கண்டம் இருப்பதாக கூறியதாகவும் கனகராஜின் மனைவி ஏற்கனவே காவல்துறையினரிடம் வாக்குமூலம் அளித்து இருந்தார்.
இதனை அடிப்படையாக கொண்டு தற்போது ஜோதிடரை எடப்பாடியை சேர்ந்த ஜோதிடரை விசாரிக்க சிபிசிஐடி போலீசார் திட்டமிட்டு உள்ளனர் என்றும், மேலும், ஜெயலலிதாவின் நெருங்கிய தோழியாக இருந்த சசிகலாவிடமும் தற்போது சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த விசாரணைக்காக மே முதல் வாரத்தில் சம்மன் அனுப்ப இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
தமிழிசையின் இல்லத்திற்கு சென்று ஆறுதல் கூறிய அமித் ஷா.!
April 11, 2025