கடந்த 2018 ஆம் ஆண்டு திமுக மற்றும் அதன் தோழமை கட்சிகளான காங்கிரஸ், மனிதநேய மக்கள் கட்சி, விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி முழு அடைப்பு போராட்டம் மற்றும் கடையடைப்பு நடத்தப்பட்டது. இந்த போராட்டத்திற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் காங்கிரஸ் கட்சி, விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சினர் பங்கேற்றனர்.ஆனால் இந்த போராட்டம் அனுமதி இல்லாமல் நடைபெற்றதாக திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கு சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.அப்பொழுது திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், திருநாவுக்கரசர்,கராத்தே தியாகராஜன் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் ,மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா,சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார்,இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தலைவர் காதர்மொய்தீன் ஆகிய 7 பேரும் இன்று சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக உத்தரவு பிறப்பித்தது.
இதனால் இன்று சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், கராத்தே தியாகராஜன் ஆஜராகினர். இருவருக்கும் குற்றப்பத்தரிக்கை நகல்களை நீதிமன்றம் வழங்கியது.பின்னர் விசாரணை ஜனவரி 17-ஆம் தேதிக்கு ஒத்திவைப்பதாக நீதிமன்றம் தெரிவித்தது. ஆனால் சம்மன் கிடைக்காததால் ஆஜராகவில்லை என்று மு.க. ஸ்டாலின் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் தெரிவித்தார்.
சென்னை : இயக்குநர் சுகுமார், நடிகர் அல்லு அர்ஜூன் கூட்டணியில் உருவாகி இருக்கும் 'புஷ்பா 2' திரைப்படம் வரும் டிசம்பர்…
தருமபுரி : தவெக தலைவர் விஜய், 2026 தேர்தலில் தாம் போட்டியிட இருக்கும் தொகுதி குறித்து தீவிரமாக ஆலோசித்து வருகிறார்.…
சென்னை : மாலத்தீவு மற்றும் பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதிகள் முதல் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகள் வரை…
சென்னை : தெலுங்கு மக்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில், நடிகை கஸ்தூரியை வருகிற 29ஆம் தேதி வரை நீதிமன்றக்…
டெல்லி : ஆம் ஆத்மி கட்சியில் முக்கிய பொறுப்பில் இருந்த கைலாஷ் கெலாட் தனது அமைச்சர் பதவி மற்றும் ஆம்…
சான் பிரான்சிஸ்கோ : உலக பணக்காரர்களில் முதன்மையானவர்களாக இருக்கும் எலான் மஸ்க், தனது ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ஸ்டார்ஷிப் மூலம்…