இருவரை பச்சைபடுகொலை செய்த சாதிவெறி கும்பலை உடனடியாக கைது செய்ய வேண்டும் – சீமான்
அரக்கோணத்தில் அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு இருவரைப் பச்சைப்படுகொலை செய்திட்ட சாதிவெறிக்கும்பலை உடனடியாகக் கடும் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறைப்படுத்த வேண்டும்.
கடந்த 7-ஆம் தேதியன்று, ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணத்தை அடுத்த கௌதம் நகரில் இருதரப்பினர் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது. இந்த வாய்த்தகராறு இறுதியில் மோதலாக மாறிய நிலையில், இரு தரப்பினரும் கத்தி, பாட்டில் என கூர்மையான ஆயுதங்களைப் பயன்படுத்தினர். இந்த மோதலில் அர்ஜுன், சூர்யா என இருவர் உயிரிழந்த நிலையில், 3 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக ஆறு பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள், தனது ட்வீட்டர் பக்கத்தில் கண்ண்டானாம் தெரிவித்து ஒரு பதிவினை பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், ‘அரக்கோணத்தில் அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு இருவரைப் பச்சைப்படுகொலை செய்திட்ட சாதிவெறிக்கும்பலை உடனடியாகக் கடும் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறைப்படுத்த வேண்டும்!’ என பதிவிட்டுள்ளார்.
அரக்கோணத்தில் அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு இருவரைப் பச்சைப்படுகொலை செய்திட்ட சாதிவெறிக்கும்பலை உடனடியாகக் கடும் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறைப்படுத்த வேண்டும்!https://t.co/QiWmHAdDVw
— சீமான் (@SeemanOfficial) April 9, 2021