குட்கா உரிமை மீறல் நோட்டீஸூக்கு எதிரான வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது சென்னை உயர்நீதிமன்றம்.
சட்டப்பேரவைக்கு தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் உள்ளிட்ட எம்.எல்.ஏக்கள் எடுத்து சென்றனர். அதற்கு எதிராக அவர்களுக்கு உரிமை மீறல் நோட்டீஸ் அனுப்பப்பட்டது.அதனை எதிர்த்து திமுக தலைவர் மு.க ஸ்டாலின் மற்றும் 21 எம்எல்ஏக்கள் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இதனையடுத்து நீதிபதி ஏ. பி. சாஹி மற்றும் செந்தில் ராமமூர்த்தி தலைமையிலான அமர்வு நேற்று மீண்டும் இந்த வழக்கு தொடர்பான விசாரணை நடைபெற்றது.அதில் சட்டமன்றத்தில் பெரும்பான்மை இழந்ததால் தான், திமுக எம்.எல்.ஏ.க்களுக்கு எதிராக உரிமை மீறல் பிரச்சினை எடுக்கப்பட்டதாக கூறுவது தவறு என்று அரசு சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டது .ஆரம்பம் முதல் தற்போது வரை அரசுபெரும்பான்மையுடன் இருக்கிறது என்று தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து இந்த வழக்கின் விசாரணை இன்று நடைபெற்றது. அப்பொழுது ,ஓபிஎஸ் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏ-க்களுக்கு எதிரான புகார் மீது நடவடிக்கை எடுக்காத நிலையில் தி.மு.க மீது மட்டும் உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்பட்டது என்று திமுக தரப்பில் வாதிடப்பட்டது.இறுதியாக ஸ்டாலின் உள்பட 21 திமுக எம்.எல்.ஏ.க்கள் தொடர்ந்த வழக்கில் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைப்பதாக உயர்நீதிமன்றம் அறிவித்தது.
காஞ்சிபுரம் : பரந்தூர் பகுதியில் புதியதாக அமைக்கப்பட உள்ள விமான நிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து 910 நாட்களாக அப்பகுதி 13…
சென்னை : கனிமவள கொள்ளைக்கு எதிராக போராடிய சமூக ஆர்வலர் ஜெகபர் அலி நேற்று முன்தினம் விபத்தில் உயிரிழந்ததாக கூறப்பட்ட…
சென்னை : பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்க அப்பகுதி கிராம மக்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில்…
காஞ்சிபுரம் : பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்க அப்பகுதி கிராம மக்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில்…
சென்னை : மக்கள் பலரும் விரும்பி பார்த்து வந்த பிக் பாஸ் சீசன் 8 தமிழ் நிகழ்ச்சி ஒரு வழியாக நேற்று…
காசா : அக்டோபர் 2023-ல் தொடங்கிய இஸ்ரேல் - ஹமாஸ் போரால் கடந்த 15 மாதங்களுக்கு மேலாக காசா நகர்…