சட்டப்பேரவைக்குள் குட்கா கொண்டு சென்ற விவகாரம்- சற்று நேரத்தில் தீர்ப்பு.!

Default Image

உரிமை மீறல் நோட்டீஸை எதிர்த்து மு.க.ஸ்டாலின் உள்பட 21 எம்.எல்.ஏக்கள் தொடர்ந்த வழக்கில் இன்னும் சற்று நேரத்தில் சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு அளிக்கிறது.

தமிழக சட்டப்பேரவைக்கு தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட எம்.எல்.ஏக்கள் எடுத்து சென்றனர். அதற்கு எதிராக அவர்களுக்கு உரிமை மீறல் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அதனை, எதிர்த்து திமுக தலைவர் மு.க ஸ்டாலின் உட்பட 21 எம்எல்ஏக்கள் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

ஏற்கனவே, விசாரணைக்கு வந்த இந்த வழக்கில் ஸ்டாலின் உள்ளிட்டோர் தலைமையில் ஆஜரான வழக்கறிஞர் கூறுகையில், நாட்டில் குட்கா பொருட்கள் எளிதில் கிடைப்பதாகவும், அதனை அரசின் கவனத்திற்கு கொண்டு வர மட்டுமே சட்டப்பேரவைக்கு எடுத்து சென்றதாகவும், அதனால் சபாநாயகரை எந்த அவமரியாதையும் செய்யவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், உரிமை மீறல் நோட்டீஸை எதிர்த்து மு.க.ஸ்டாலின் உள்பட 21 எம்.எல்.ஏக்கள் தொடர்ந்த வழக்கில் இன்னும் சற்று நேரத்தில் சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு அளிக்கிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்