சாத்தான்குளம் விவகாரத்தில் முதல்வரை விசாரிக்க கோரிய வழக்கு -உச்சநீதிமன்றம் நாளை விசாரணை

Default Image

சாத்தான்குளம்  விவகாரத்தில் முதல்வரை விசாரிக்க கோரிய வழக்கினை உச்சநீதிமன்றம் நாளை விசாரிக்கிறது.

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் சேர்ந்த பென்னிக்ஸ் மற்றும் அவரது தந்தை ஜெயராஜ் ஆகியோர் கோவில்பட்டி கிளைச் சிறையில் உயிரிழந்தனர். சிறையில் தந்தை மகன் உயிரிழந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த சம்பவம் தொடர்பாக தற்போது சிபிஐ விசாரணை மேற்கொண்டு வருகிறது.இதற்கு இடையில் இந்த சம்பவம் குறித்து முதலமைச்சர் பழனிசாமி அறிக்கை வெளியிட்டார்.அவரது அறிக்கையில், கோவில்பட்டி சிறையில் தந்தை ஜெயராஜ் உடல்நலக்குறைவு காரணமாகவும், மகன் பென்னிக்ஸ் மூச்சுத் திணறல் காரணமாகவும் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டது.ஆனால் முதலமைச்சரின் இந்த அறிக்கைக்கு கனிமொழி உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்தனர்.முதலமைச்சருக்கு சிறையில் உயிரிழந்த தந்தை,மகனின் இறப்பின் காரணம் எப்படி தெரிந்தது  என்று  கனிமொழி கேள்வி எழுப்பினார்.

எனவே உச்சநீதிமன்றத்தில் வழக்கறிஞர் ராஜராஜன் என்பவர் வழக்கு ஒன்றை தொடர்ந்தார். அவரது வழக்கில், பென்னிக்ஸ் மூச்சுத் திணறல் காரணமாகவும் உயிரிழந்ததாக முதல்வர் கூறியதால் அவரை விசாரிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். இந்த வழக்கினை உச்சநீதிமன்றம் நாளை விசாரிக்க உள்ளதாக அறிவித்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்