3 யானைகள் பலி.! சென்னை உயர்நீதிமன்றத்தில் அவசர வழக்காக விசாரணை.!

Default Image

தருமபுரியில் 3 யானைகள் பலியான சம்பவம் தொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் அவசர விசாரணைக்கு இன்று மதியம் எடுத்துக்கொள்ளப்பட உள்ளது. 

தருமபுரி மாவட்டம் மாண்டஹள்ளி அருகே விவசாய நிலையத்தில் வைத்து இருந்த மின்வேலியில் சிக்கி மூன்று காட்டு யானைகள் உயிரிழந்தன. காளிகவுண்டன் கொட்டாய் பகுதியில் இரண்டு குட்டிகளுடன் 5 காட்டு யானைகள் விவசாய நிலத்தினை சுற்றிவரும்போது இந்த தூயர சம்பவம் நடைபெற்றது.

வனத்துறை விசாரணை : விவசாய நிலத்தில் அதிக மின்சாரம் பாயும் மின்வேலி அமைத்தது தொடர்பாக சக்தி மற்றும் முருகேசன் ஆகியரிடம் வனத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

உயர்நீதிமன்றத்தில் வழக்கு : தற்போது 3 காட்டு யானைகள் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக விலங்குகள் நல அலுவலர் முரளிதரன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளளது. இவர் ஏற்கனவே தமிழகத்தில் மின்வேலியில் சிக்கி உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் உயிரிழந்த யானைகள் பற்றி தாக்கல் செய்த வழக்குகள் தொடர்ந்து நிலுவையில் உள்ளது.

அவசர வழக்கு : அந்த வழக்குகளோடு சேர்த்து, 3 யானைகள் உயிரிழந்தது தொடர்பாகவும், வழக்கு தொடரப்பட்டு இருந்தது. இந்த வழக்கை அவசர வழக்காக ஏற்றுக்கொண்டு பொறுப்பு அமர்வு நீதிப்பதிகள் அடங்கிய அமர்வு, இன்று மதியம் விசாரணை தொடங்க உள்ளது.

விதிமுறைகள் : இந்த அவசர வழக்கு மனுவில், தாயை இழந்து தவிக்கும் 2 குட்டியானைகளை பாதுகாக்கவும்,  மின் வேலி தொடர்பான விதிமுறைகள் வகுக்கவும், யானைகள் உயிரிழந்த சம்பவத்தில் உரிய விசாரணை நடத்தவும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே, அதிக அளவில் மின்சாரம் பாயக்கூடிய மின்வேலிகளை அமைக்க கூடாது எனவும், குறிப்பிட்ட நேரத்திற்க்கு தான் மின் வேலிகளை பயன்படுத்த வேண்டும் என்பதும் ஏற்கனவே விதிமுறைகளில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்