கோவில் அறங்காவலர்கள் தேர்வு செய்வதற்கான மாவட்ட குழுக்கள் மே மாதத்துக்குள் நியமிக்கப்படும் என அறநிலையத் துறை உறுதியளித்துள்ளது.
தமிழகத்தில் உள்ள கோயில்களில் அறங்காவலர்கள் தேர்வு செய்வதற்கான மாவட்ட குழுக்கள் மே மாதத்துக்குள் நியமிக்கப்படும் என சென்னை உயர் நீதிமன்றத்தில் இந்து சமய அறநிலையத் துறை தரப்பில் உறுதியளிக்கப்பட்டுள்ளது. கோவில் அறங்காவலர்கள் தேர்வு தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. இந்த வழக்கு விசாரணை தொடர்ந்து நடைபெற்று வந்தது.
இந்நிலையில் அனைத்து கோவில்களுக்கு ஒரே மாதிரியான விண்ணப்பங்களை இணையதளத்தில் பதிவேற்ற இந்து சமய அறநிலையத்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அந்த உத்தரவை அடுத்து இன்று வழக்கு விசாரணையின் போது அறநிலையத் துறை சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.
அந்த விளக்கத்தில் அறங்காவலர்களை தேர்வு செய்வதற்கான மாவட்ட குழுக்கள் 23 மாவட்டங்களில் அமைக்கப்பட்டுள்ளன என்றும் 4 மாவட்டங்களில் இம்மாத இறுதிக்குள் அமைக்கப்படும், மீதமுள்ள 11 மாவட்டங்களில் மே மாத இறுதிக்குள் அமைக்கப்படும் என்றும் அறநிலையத் துறை சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
அறநிலையத் துறையின் விளக்கத்தை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம் குழுக்கள் அமைக்கத் தவறினால் அறங்காவலர் நியமன பணிகளை கண்காணிக்க உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி நியமிக்கப்படுவார் என்று உத்தரவிட்டு அறங்காவலர்கள் நியமனம் தொடர்பான வழக்கை ஏப்ரல் 5ம் தேதிக்கு ஒத்திவைத்தது.
சென்னை : சீமான் தலைமையில் 2010ஆம் ஆண்டு மே மாதம் ஆரம்பிக்கப்பட்ட கட்சி 'நாம் தமிழர் கட்சி'. அப்போது முதல்…
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் எனும் கட்சியை நடிகர் விஜய் தொடங்கி வரும் பிப்ரவரி மாதத்தோடு ஓராண்டு நிறைவு…
டெல்லி : விண்வெளியில் இரண்டு செயற்கை கோள்களை ஸ்பேஸ் டாக்கிங் (Space Docking) செயல்முறை மூலம் இணைக்கும் நோக்கத்திற்காக ஸ்ரீஹரிகோட்டாவில்…
சென்னை: தமிழக சட்டப்பேரவையில் இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் - எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி இடையே காரசார விவாதம் நடந்தது.…
மதுரை : நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அண்மையில் கடலூர் மற்றும் புதுச்சேரியில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்புகளின் போது…
சீனா : கார் ஒட்டிக்கொண்டு சாலையில் வேகமாக செல்லும் போது சில சமயங்களில், சாலைகளில் இருக்கும் மேடு பள்ளங்களை கவனிக்காமல்…