கள்ளக்குறிச்சி மாணவி மரண வழக்கு! 2 வாரங்களில் இறுதி அறிக்கை.. காவல்துறை உறுதி!
கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி மரணம் வழக்கில் 2 வாரங்களில் இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்படும் என காவல்துறை உறுதி.
மாணவி மரணம் வழக்கு – இறுதி அறிக்கை:
கள்ளக்குறிச்சி கனியாமூர் பள்ளி மாணவி மரணம் வழக்கில், இன்னும் 2 வாரங்களில் இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்படும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் காவல்துறை உறுதி அளித்துள்ளது. மேலும், மரணமடைந்த பள்ளி மாணவி பயன்படுத்திய செல்போனை ஆய்வு செய்த, தடயவியல் துறையின் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெற்றோர் தரப்பு கோரிக்கை நிராகரிப்பு:
மாணவி மரண வழக்கின் விசாரணையை சிறப்பு விசாரணை குழுவுக்கு மாற்ற கோரி தயார் தாக்கல் செய்த மனுவுக்கு சிபிசிஐடி பதில் தர சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மாணவியின் பெற்றோர் தரப்பு கோரிக்கையை நிராகரித்து வழக்கு விசாரணையை மார்ச் 23-க்கு ஒத்திவைக்கப்பட்டது. பதில் மனு தாக்கல் செய்யும் வரை இறுதி அறிக்கை தாக்கல் செய்வதில் தற்போதைய நிலையே நீடிக்க வேண்டும் என்ற பெற்றோர் தரப்பு கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.