எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா : “சட்ட விரோத பேனர்கள் அகற்ற வழக்கு” நீதிமன்ற விசாரணை…!!
எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவை தமிழ்நாடு அரசு சார்பில் 31 மாவட்டங்களில் கொண்டாடி முடித்தார்கள். நிறைவாக சென்னையில் நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. திடலில் செப்டம்பர் 30 (ஞாயிறு) இன்று மாலையில் பிரமாண்ட விழாவுக்கு அரசு சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.
இதனால் சாலையோரங்களில் விபத்து ஏற்படும் வகையில் ஏராளமான விளம்பர பேனர்கள் , சாலையில் இரண்டு ஓரங்களும் தெரியாத அளவுக்கு சட்ட விரோதமாக வைக்கப்பட்டுள்ள பேனர்களால் சாலை விபத்து ஏற்படும் சூழல் உருவாக்கி உள்ளது.எனவே மக்களின் பாதுகாப்பு கருதி சட்ட விரோதமாக வைக்கப்பட்ட பேனர்களை அகற்றக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் டிராபிக் ராமசாமி வழக்கு தொடர்ந்து இருக்கின்றாரார்.இந்த வழக்கை நீதிபதி மணிக்குமார் தலைமையிலான அமர்வு அவசர வழக்காக எடுத்து விசாரணை நடத்தி வருகிறது.
சட்டவிரோதமாக பேனர் வைத்துள்ளதை சுட்டிக்காட்டி எதிர்க்கட்சி தலைவர் முக.ஸ்டாலின் இந்த விழாவில் தாம் கலந்து கொள்ள போவதில்லை என்று கூறியது குறிப்பிடத்தக்கது.
DINASUVADU