அமைச்சர் தங்கம் தென்னரசுவுக்கு எதிரான சொத்து குவிப்பு வழக்கு.! இன்று விசாரணை… 

Minister Thangam thennarsu

Thangam Thennarasu – தமிழக நிதியமைச்சர் தங்கம் தென்னரசுக்கு எதிரான சொத்துகுவிப்பு வழக்கில் இன்றும் விசாரணை தொடர உள்ளது.

முன்னாள், இன்னாள் மக்கள் பிரதிநிதிகள் மீதான வழக்குகள் மாவட்ட நீதிமன்றங்கள், சிறப்பு நீதிமன்றங்களில் அவர்கள் போதிய ஆதாரமின்றி என கூறி விடுவிக்கப்பட்டாலும் சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணை நடத்துவது தொடர் கதையாக நடைபெற்று வருகிறது.  முன்னதாக முன்னால அமைச்சர் பொன்முடி, அமைச்சர் பொன்முடியை தொடர்ந்து அமைச்சர் தங்கம் தென்னரசு மீதான சொத்து குவிப்பு வழக்கும் சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணை செய்யப்பட்டு வருகிறது.

Read More – எச்சரிக்கை.! திமுக காணாமல் போகுமா.? பிரதமருக்கு டி.ஆர்.பாலு கடும் கண்டனம்.!

வருமானத்துக்கு அதிகமாகச் சொத்து சேர்த்ததாக அமைச்சர் தங்கம் தென்னரசு மற்றும் அவரது மனைவி மணிமேகலை மீது ஸ்ரீவில்லிப்புத்தூர் சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று அந்த வழக்கில் இருவரும் விடுவிக்கப்பட்டனர். இதனை அடுத்து இந்த உத்தரவுக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணை நடத்தி வருகிறது.

ReadMore – அகிலேஷ் யாதவுக்கு சம்மன் அனுப்பிய சிபிஐ..!

சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேசன் தலைமையிலான அமர்வு முன்னிலையில் இந்த விசாரணை நடைபெற்று வருகிறது.  நேற்று நடைபெற்ற விசாரணையில், அமைச்சர் தங்கம் தென்னரசு மனைவி தரப்பில் வாதிடுகையில், முதலில் தங்கள் வருமானத்திற்கு உரிய கணக்கு கான்பிக்கப்படும் அவற்றை விசாரணை அதிகாரிகள் ஏற்றுக்கொளவில்லை என்றும், அதன் பிறகு புலன் விசாரணை அதிகாரிகள் அதனை மீண்டும் விசாரித்து அதன் அடிப்படையில் சிறப்பு நீதிமன்றம் தங்களை விடுத்ததாக குறிப்பிட்டார்.

READ MORE- பரபரக்கும் இமாச்சல் பிரதேச அரசியல்.! 15 பாஜக எம்எல்ஏக்கள் அதிரடி சஸ்பெண்ட்.!

அதனை அடுத்து அமைச்சர் தங்கம் தென்னரசு தரப்பில் வழக்கறிஞர் வாதிடுகையில், இது முறையாக கணக்கு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டு விட்டது.இது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை காரணமாக இந்த வழக்கு விசாரணை அறிக்கைகள் தாக்கல் செய்யப்படலாம் என வாதிட்டார்

இதனை அடுத்து உயர்நீதிமன்ற நீதிபதி அமர்வு, இந்த வழக்கை விசாரணை செய்த புலன் விசாரணை அதிகாரி பூமிநாதன் விசாரணை அறிக்கையில் வித்தியாசம் உள்ளது என கூறி இன்று அவர் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என கூறி இன்று பிற்பகல் அமைச்சர் தங்கம் தென்னரசு மீதான சொத்து குவிப்பு வழக்கு மீண்டும் விசாரணை நடைபெறும் என கூறப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்