ஈரோடு கிழக்கில் விதிமீறல் புகாரில் மேலும் 2 வழக்குகள் பதிவு செய்யபட்டு உள்ளன என்று தேர்தல் அலுவலர் சிவகுமார் தகவல்.
தேர்தல் ஆணையம் நடவடிக்கை:
ஈரோடு கிழக்கு தொகுதியில் வரும் 27-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர். மறுபக்கம், பரிசுப்பொருட்கள், பணப்பட்டுவாடா மற்றும் அனுமதியின்றி தேர்தல் பணிமனைகளுக்கு சீல் வைப்பு உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது. ஈரோடு கிழக்கு தொகுதியில் பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது.
பரிசுப்பொட்கள் கொடுத்ததாக வழக்கு:
இந்த நிலையில், ஈரோட்டில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய தேர்தல் அலுவலர் சிவகுமார், ஈரோடு கிழக்கு தொகுதியில் பரிசுப்பொட்கள் கொடுத்ததாக 2 இடங்களில் 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. தேர்தல் விதி மீறல் தொடர்பாக கட்டுப்பாட்டு அறைக்கு வந்த 455 புகார்களில், இதுவரை 43 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், தேர்தல் விதிமுறை மீறல் பிரிவு 453இன் கீழ் 50 வழக்குகள் பதிவு செய்யபட்டு உள்ளன என்றும் கூறியுள்ளார்.
தேர்தல் பிரச்சாரம் நிறைவு:
மேலும், அனுமதி பெறாமல் இயங்கி வந்த 8 பணிமனைகள் அகற்றப்பட்ட நிலையில், 14 பணிமனைக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது என தெரிவித்த தேர்தல் அலுவலர், வரும் 25ஆம் தேதி மாலை 5 மணியுடன் தேர்தல் பிரச்சாரம் நிறைவு பெறுகிறது, இதற்கு அப்புறம் தேர்தல் பிரச்சாரம் செய்ய கூடாது என்றும் 25ஆம் தேதி மாலையுடன் வெளி மாவட்டத்தை சேர்ந்த நபர்கள் ஈரோடு கிழக்கு தொகுதியை விட்டு வெளியேற வேண்டும் எனவும் தெரிவித்தார். பணப்பட்டுவாடா தொடர்பாக புகார் அளித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் குறிப்பிட்டார்.
சென்னை : தனுஷ் இயக்கி இருக்கும் "நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் " திரைப்படம் வரும் பிப்ரவரி 6-ஆம் தேதி…
டெல்லி : 2025- 26 ஆண்டுக்கான நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் எப்போது தொடங்கி எப்போது முடியும் என்கிற தகவல் தற்போது…
மும்பை : இந்திய கிரிக்கெட் அணியில் வளர்ந்து வரும் இளம் வீரரான (27) ரிங்கு சிங் விரைவில் திருமணம் செய்துகொண்டு…
சென்னை : நடிகர் விஜய் தமிழக வெற்றி கழகம் என்ற பெயரில் அரசியல் கட்சி தொடங்கி வரும் 2026 சட்டமன்ற தேர்தலில்…
சென்னை : இராணிப்பேட்டை மாவட்டம் நெமிலியை அடுத்த திருமால்பூரில் பாட்டாளி மக்கள் கட்சியின் மீது விடுதலை சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்தவர்கள்…
மும்பை : ஆஸ்ரேலியாவுக்கு எதிராக நடந்து முடிந்த பார்டர்-கவாஸ்கர் டிராபி தொடரில் இந்திய அணி தோல்வியடைந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதில்…