பழனிசாமிக்கு எதிராக கருத்து கூற கூடாது என்ற தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்படும் என அறப்போர் இயக்கம் தகவல்.
நெடுஞ்சாலைத்துறை டெண்டர் வழக்கில் தன்னை பற்றி பேச அறப்போர் இயக்கத்துக்கு தடை விதிக்க வேண்டும் என எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தார். இந்த வழக்கு விசாரணையின்போது, முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பற்றி அவதூறாக பேச அறப்போர் இயக்கத்திற்கு தடை விதித்து நேற்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
அறப்போர் செயல் அவப்பெயர் ஏற்படுத்தியதுடன் மன உளைச்சலும் ஏற்பட்டுள்ளதாக இபிஎஸ் கூறியிருந்தார். மேலும், டெண்டர் முறைகேடு புகார் தெரிவித்த அறப்போர் இயக்கம் ரூ.1.10 கோடி மான நஷ்ட ஈடு தர வேண்டும் என்றும் கோரியிருந்த வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.
இந்த நிலையில், நெடுஞ்சாலை டெண்டர் வழக்கு தொடர்பாக பழனிசாமிக்கு எதிராக கருத்து கூற கூடாது என்ற உயர் நீதிமன்றம் உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்ய உள்ளதாக அறப்போர் இயக்கம் தெரிவித்துள்ளது. ஐகோர்ட்டின் தீர்ப்பு ஏற்கனவே முடிவு செய்யப்பட்ட சட்ட நிலைப்பாட்டிற்கு புறம்பானதாக உள்ளதாக அறப்போர் இயக்கம் கருத்து கூறியுள்ளது. இதனால் பழனிசாமிக்கு எதிராக கருத்து கூற கூடாது என்ற தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்படும் எனவும் தெரிவித்துள்ளது.
சென்னை -90 கிட்ஸ்க்கு பிடித்த பெட்டிக்கடை தேன் மிட்டாய் சுலபமான முறையில் வீட்டிலேயே செய்வது எப்படி என இந்த செய்தி…
திருவாரூர் : உலக நாடுகள், உலக மக்கள் என அனைவரும் பெரிதளவு எதிர்பார்க்கும் அமெரிக்க அதிபர் தேர்தல் இன்னும் சற்று…
சென்னை : சென்னை : தமிழகத்தில் சில இடங்களில் மின் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் தினமும் மின்தடை ஏற்படுவது வழக்கம்.…
திருச்சி : ஆட்சியில் பங்கு அதிகாரத்தில் பங்கு, தவெக மாநாடு என தமிழக அரசியல் வட்டாரத்தில் கூட்டணி ஆட்சி குறித்தும்,…
சென்னை : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி பல மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கிக்கொண்டு இருக்கும் நிலையில், இன்று (நவம்பர்5)…
திருச்சி : வரும் டிசம்பர் மாதம் 6ஆம் தேதி அண்ணல் அம்பேத்கர் நினைவுகளை முன்னிட்டு சென்னையில் ஓர் புத்தக வெளியீட்டு…