“சிக்குகிறார் ஹெச்.ராஜா” வழக்கு பாய்கிறது..!!

Default Image

ஹெச்.ராஜா மீது திங்கட்கிழமை சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் புகார் தெரிவிக்க இருக்கிறார்கள்.

ஹெச்.ராஜா, பாரதீய  ஜனதா கட்சியின் தேசியச் செயலாளர் பொறுப்பில் இருக்கிறார். புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே மெய்யப்பபுரத்தில் விநாயகர் சதூர்த்தி ஊர்வலத்தில் கலந்துகொண்ட ஹெச்.ராஜா, அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த போலீஸாருடன் வாக்குவாதம் செய்தார்.

Image result for ஹெச்.ராஜா, அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த போலீஸாருடன் வாக்குவாதம் செய்தார்.

ஹெச்.ராஜா, சென்னை உயர் நீதிமன்றம் குறித்து அவதூறாக பேசிய வீடியோ வெளியானது. ஆனால் இன்று (செப்டம்பர் 16) அது குறித்து விளக்கம் அளித்த ஹெச்.ராஜா, ‘எனது பேச்சை முழுமையாக வெளியிடாமல், யாரோ எடிட் செய்து வெளியிட்டிருக்கிறார்கள். நான் நீதிமன்றத்தை பாராட்டியே பேசினேன். நீதிமன்ற உத்தரவுப்படியே விநாயகர் ஊர்வலங்கள் நடக்கின்றன. அப்படியிருக்க, நான் ஏன் நீதிமன்றங்களை அவமதிக்கப் போகிறேன்?’ என கேள்வி எழுப்பினார்.

எனினும் ஹெச்.ராஜா பேசியதாக வெளியான வீடியோவில் நேரடியாக சென்னை உயர் நீதிமன்றத்தை மோசமாக சித்தரித்தும் வார்த்தை பிரயோகம் இருப்பதால், இது தொடர்பாக வழக்கு தொடர சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் பலரும் தயாராகி வருகிறார்கள்.

Image result for உயர் நீதிமன்ற

அண்மையில் 18 எம்.எல்.ஏ.க்கள் வழக்கில் முந்தைய தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி வழங்கிய தீர்ப்பு குறித்து அம்மா மக்கள் முன்னேற்றக் கழக கொள்கை பரப்பு செயலாளர் தங்க தமிழ்செல்வன் விமர்சித்தார். இது குறித்து இரு வழக்கறிஞர்கள் சென்னை உயர் நீதிமன்ற கவனத்திற்கு எடுத்துச் சென்றனர்.

தங்க தமிழ்செல்வன் மீதான புகார் குறித்து அட்வகேட் ஜெனரலை விசாரிக்க உத்தரவிட்டது நீதிமன்றம். அதன்படி அட்வகேட் ஜெனரல் விஜய் நாராயன் நீதிமன்ற அவமதிப்பு புகார் அடிப்படையில் தங்க தமிழ்செல்வனுக்கு சம்மன் அனுப்பி நேரில் வரவழைத்தார்.

Image result for மெய்யப்பபுரத்தில் விநாயகர் ஊர்வலத்தில் கலந்துகொண்ட ஹெச்.ராஜா

தங்க தமிழ்செல்வன் நிபந்தனையற்ற மன்னிப்பு கோருவதாக தெரிவித்தார். எனினும் அது குறித்து அட்வகேட் ஜெனரல் நீதிமன்றத்தில் அறிக்கை கொடுப்பார். அதன் அடிப்படையில் நடவடிக்கை குறித்து நீதிமன்றம் முடிவு செய்ய இருக்கிறது.

Image result for அவமதிப்பு வழக்கு எழுத்து

ஹெச்.ராஜா மீதும் அதே பாணியில் நடவடிக்கை எடுக்கப்படலாம் என தெரிகிறது. எனினும் ஹெச்.ராஜா மீது பல்வேறு நீதிமன்றங்களிலும் புகார் தெரிவிக்க வழக்கறிஞர்கள் தயார் ஆவதால் இதில் சீரியஸான நடவடிக்கை எடுக்கப்படலாம் என்கிற தகவல்களும் இருக்கின்றன.

Image result for தீர்ப்பு

இன்று(செப்டம்பர் 16) ஞாயிற்றுக் கிழமை என்பதால், நாளை ஹெச்.ராஜா மீதான புகார்கள் நீதிமன்றங்களில் அணிவகுக்கும் என எதிர்பார்க்கலாம்.பலநாள் திருடன் ஒருநாள் அகப்படுவான் என்பதை போல பல நாட்களாக பேசிய ஹெச்.ராஜா இன்று வசமாக சிக்குவதற்கு வாய்ப்புள்ளது..

DINASUVADU 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்