கேப்டன் ஆரோக்கியமாக இருக்கிறார் – வீடியோ வெளியிட்ட பிரேமலதா விஜயகாந்த்..!
தேமுதிக தலைவர் விஜயகாந்த் கடந்த மாதம் 18-ஆம் தேதி காய்ச்சல், சளி, இருமல் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டு சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள மியாட் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அப்போது, விஜயகாந்த் வழக்கமான பரிசோதனைக்காக சென்றுள்ளதாகவும், ஓரிரு நாளில் வீடு திரும்புவார் என தேமுதிக தரப்பில் கூறப்பட்டது. சமீபத்தில் மியாட் மருத்துவமனை அறிக்கை ஒன்று வெளியானது.
அதில், விஜயகாந்த் அவர்களின் உடல்நலத்தில் நல்ல முன்னேற்றம் காணப்பட்டது. எனினும், கடந்த 24 மணி நேரத்தில் அவரது உடல்நிலை சீரான நிலையில் இல்லாததால், அவருக்கு நுரையீரல் சிகிச்சைக்கான உதவி தேவைப்படுகிறது. அவர் விரைவில் பூரண உடல்நலம் பெறுவார் என்று நம்புகிறோம். அவருக்கு இன்னும் 14 நாட்கள் மருத்துவமனையில் தொடர் சிகிச்சை தேவைப்படுகிறது என தெரிவிக்கப்பட்டது.
இதனைத்தொடர்ந்து, அரசியல் தலைவர்கள், தேமுதிக தொண்டர்கள் என பலரும் விஜயகாந்த் விரைவில் குணமடைய வேண்டும் என பிரார்த்தனை செய்து வருகின்றனர். இதற்கிடையில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாகவும், செயற்கை சுவாசம் வழங்கப்பட்டு வருவதாக செய்திகள் பரவியது.
இந்நிலையில், பிரேமலதா விஜயகாந்த் கூறுகையில், ” கேப்டன் ஆரோக்கியமாக இருக்கிறார். வெகு விரைவில் கேப்டன் நல்ல உடல் நலத்துடன் வீடு திரும்புவார், நம் அனைவரையும் சந்திப்பார். யாரும் வதந்திகளை பரப்பவும் வேண்டாம், நம்பவும் வேண்டாம் என்று அன்போடு கேட்டுக்கொள்கிறேன்” என தெரிவித்துள்ளார்.
கேப்டன் ஆரோக்கியமாக இருக்கிறார்.
வெகு விரைவில் கேப்டன் நல்ல உடல் நலத்துடன் வீடு திரும்புவார், நம் அனைவரையும் சந்திப்பார்.
யாரும் வதந்திகளை பரப்பவும் வேண்டாம், நம்பவும் வேண்டாம்! என்று அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.– திருமதி. பிரேமலதா விஜயகாந்த். pic.twitter.com/sbzd0FDOX4
— Vijayakant (@iVijayakant) December 2, 2023