நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி தொகுதிகளில் இன்று மாலையுடன் பிரச்சாரம் நிறைவு
நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி தொகுதிகளில் இடைத்தேர்தல் பிரச்சாரம் இன்று மாலையுடன் நிறைவு பெறுகிறது.
தமிழகத்தில் உள்ள நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி தொகுதியில் வருகின்ற 21-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. அரசியல் கட்சித் தலைவர்கள் அனைவரும் தீவிரமாக வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில் பிரச்சாரம் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில்,இன்று மாலை 6 மணியுடன் பிரச்சாரம் நிறைவு பெறுகிறது.மேலும் வெளி நபர்கள் தொகுதியை விட்டு வெளியேற வேண்டும் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.