இன்றுடன் ஓய்கிறது முதற்கட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான பரப்புரை…!

Default Image

முதற்கட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான பிரச்சாரம் இன்று மாலை 5 மணியுடன் நிறைவு பெறுகிறது.

தமிழகத்தில், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, தென்காசி, நெல்லை, திருப்பத்தூர், ராணிப்பேட்டை, வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்,ஊராட்சி ஒன்றிய தலைவர் உள்ளிட்ட பதவிகளுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தல் வருகிற அக்டோபர் 6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெறவுள்ளது.

இந்நிலையில், முதற்கட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான பிரச்சாரம் இன்று மாலை 5 மணியுடன் நிறைவு பெறுகிறது. முதற்கட்ட தேர்தல் நடக்கும் பகுதிகளில் 6-ஆம் தேதி வரை டாஸ்மாக் மதுக்கடைகள் மற்றும் பார்கள் திறக்க தடைவிதிக்கப்பட்டுள்ளது. உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் 9 மாவட்டங்களிலும் 24,417 பதவிகளுக்கு 80,819 வேட்பாளர்கள் போட்டியிட உள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்