திருச்சி: வருகின்ற 23ம் தேதி(நாளை)திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் சார்பில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய, மாநில அரசுகளை கண்டித்து மனித சங்கலி அறப்போராட்டம் நடைபெற இருகின்றது.
இது குறித்து வெளியிட்டுள்ள கூட்டறிக்கை: திருச்சி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் கே.என்.நேரு, வடக்கு மாவட்ட செயலாளர் தியாகராஜன் ஆகியோர்அறிக்கை வெளியிட்டுள்ளனர். காவிரி மேலாண்மை வாரியத்த தன்னுடைய சுயநல அரசியல் காரணங்களால் அமைக்காமல் காலம் தாழ்த்தி மத்திய பாரதிய ஜனதா அரசு தமிழகத்தை வஞ்சித்துக்கொண்டிருக்கிறது. தமிழகத்தின் உரிமையை நிலைநாட்டி போராட வேண்டிய மாநில அதிமுக அரசோ, மத்திய அரசின் கைப்பாவையாக மாறி தமிழக மக்களின் வாழ்வாதாரத்தை கேள்விக்குறி ஆக்கி கொண்டுள்ளது. எனவே தமிழகத்தை தொடர்ந்து வஞ்சித்து வரும், மத்திய, மாநில அரசுகளை கண்டித்து திமுக செயல்தலைவர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அனைத்து கட்சி கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின் அடிப்படையில் திருச்சியில் நாளை (23ம் தேதி) மாலை 4 மணி முதல் 5 மணி வரை மாபெரும் மனித சங்கிலி அறப்போராட்டம் நடைபெற உள்ளது.இதில் அனைத்து கட்சியினர் மற்றும் பொதுமக்கள் மாணவர்கள்,இளைஞர்கள் என அனைவர்க்கும் அழைப்பு விடுத்துள்ளனர்.மனித சங்கிலி அறப்போராட்டத்திற்கு நகர, ஒன்றியத்திற்கு ஒதுக்கப்பட்ட இடங்கள். திருச்சி மாநகரத்திற்கு- ஜங்சன் பெரியார் நினைவு தூண், திருவெறும்பூர் ஒன்றியத்திற்கு-தலைமை தபால் நிலையம், துவாக்குடி நகரம், மேலப்புதூர், அந்தநல்லூர், மணிகண்டம் ஒன்றியம்-பாலக்கரை, மணப்பாறைநகரம், மணப்பாறை, வையம்பட்டி ஒன்றியம்- காந்தி மார்க்கெட், மருங்காபுரி, புள்ளம்பாடி, லால்குடி ஒன்றியம்-மரக்கடை, மண்ணச்சநல்லூர், முசிறி ஒன்றியம், துறையூர் நகரம்-மெயின்கார்டுகேட், துறையூர் ஒன்றியம்-ஜோசப்கல்லூரி, உப்பிலியபுரம், தாத்தயங்கார்பேட்டை ஒன்றியம்-சத்திரம்பேருந்து நிலையம், தொட்டியம் ஒன்றியம்-கலைஞர் அறிவாலயம். இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளனர்.
கொல்கத்தா: இந்த மாதம் நடைபெறும் இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இந்திய வீரர் கே.எல்.ராகுல் பங்கேற்கமாட்டார் என கூறப்படுகிறது.…
வைகுண்ட ஏகாதசியின் முக்கிய நிகழ்வான பரமபத வாசல் எனும் சொர்க்கவாசல் திறப்பு அனைத்து வைணவ ஆலயங்களிலும் கோலாகலமாக திறக்கப்பட்டது. சென்னை…
சென்னை : சமீபகாலமாக விளைநிலங்களில் கட்டு பன்றிகள் நுழைந்து சேதம் ஏற்படுத்தி வருவதால் அதற்கு தகுந்த நடவடிக்கைகளை அரசு எடுத்துக்கொள்ளவேண்டும் என…
சென்னை : சட்டப்பேரவையின் 5-வது நாள் கூட்டத்தொடர் இன்று தொடங்கிய நிலையில், அதில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பான சட்டதிருத்த…
சென்னை: தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், கட்சி மற்றும் கட்சியின் அடுத்தக்கட்ட நடவடிக்கையில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார். அதன் ஒரு…
டெல்லி: நடிகை தீபிகா படுகோன் சினிமாவில் நடிப்பது மட்டும் இல்லாமல், பல்வேறு சமூக நிகழ்வுகள், சர்ச்சை பேச்சுகள், சில நேரங்களில்…