முதலமைச்சர் பழனிசாமி தலைமையில் தொடங்கியது அமைச்சரவை கூட்டம்
- தமிழக அமைச்சரவை கூட்டம் இன்று தொடங்கியுள்ளது.
- தமிழக பட்ஜெட், தொழில்நிறுவனங்களுக்கு அனுமதி உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்க உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக அமைச்சரவை கூட்டம் ஜனவரி 20-ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.2020-ஆம் ஆண்டின் முதல் கூட்டம் என்பதால் ஜனவரி 20-ஆம் தேதி மாலை 4.30 மணிக்கு முதலமைச்சர் பழனிச்சாமி தலைமையில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டது.அதன்படி இன்று தமிழக அமைச்சரவை கூட்டம் முதலமைச்சர் பழனிசாமி தலைமையில் தொடங்கியது.
இந்த கூட்டத்தில் தமிழக சட்டம் ஒழுங்கு நிலவரம் குறித்தும், தொழில் நிறுவனங்களுக்கு அனுமதி ,தமிழக பட்ஜெட்டில் இடம்பெற வேண்டிய அம்சங்கள் குறித்தும் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட வாய்ப்பு உள்ளது.2020-2021ஆம் நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கை பிப்ரவரி இறுதி வாரத்தில் தாக்கல் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.எனவே நிதித்துறை அமைச்சகம் நிதிநிலை அறிக்கை தயாரிப்பு பணியில் தீவிரமாக ஈடுபட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.