தொடங்கியது தமிழ்நாடு அரசின் அமைச்சரவை கூட்டம்!
முதலமைச்சர் முக ஸ்டாலின் தலைமையில் தமிழ்நாடு அரசின் அமைச்சரவை கூட்டம் தொடங்கியது.
சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் முக ஸ்டாலின் தலைமையில் தமிழ்நாடு அரசின் அமைச்சரவை கூட்டம் தொங்கியுள்ளது. நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்ட திட்டங்களை செயல்படுவது மற்றும் திட்டங்கள் நிலவரம் குறித்து அமைச்சரவையில் ஆலோசனை நடத்தப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
புதிய தொழில் கொள்கைகளுக்கு அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்க உள்ளதாகவும், தமிழ்நாட்டுக்கு முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதலமைச்சர், அமைச்சர்களின் வெளிநாடு பயணத்திற்கு ஒப்புதல் அளிக்கப்படும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது. முதலமைச்சர் வெளிநாடு செல்ல அமைச்சரவையின் ஒப்புதல் அவசியம் என்பதால் இந்த கூட்டத்தில் அனுமதி தர வாய்ப்பு உள்ளது.
மே 10ம் தேதிக்கு பின் சிங்கப்பூர், ஜப்பான் மற்றும் இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளுக்கு முதலமைச்சர் செல்ல வாய்ப்பு உள்ளது. இதனால் அமைச்சரவையில் எந்தெந்த நிறுவனங்களில் இருந்து முதலீடு பெறுவது என்பது குறித்து விவாதம் நடத்தப்படுவதாகவும் கூறப்படுகிறது.
எனவே, ஸ்டாலின் முதல்வரான பிறகு இரண்டாவது முறையாக முதலீடுகளை ஈர்க்க வெளிநாட்டு பயணம் மேற்கொள்கிறார். ஏற்கனவே, முதல்வர் ஸ்டாலின் 2022 மார்ச்சியில் ஐக்கிய அரபு அமீரக நாட்டிற்கு அரசு முறை பயணம் மேற்கொண்டார்.