தமிழகம்:முதல்வர் ஸ்டாலின் அவர்கள் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் வருகின்ற நவம்பர் 19 ஆம் தேதி நடைபெறவுள்ளது.
வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில்,அண்மையில் பெய்த மழையின் காரணமாக தமிழகத்தில் சென்னை,காஞ்சிபுரம்,திருவள்ளூர் மற்றும் டெல்டா மாவட்டங்கள் என பல்வேறு பகுதிகளில் பாதிக்கப்பட்டன. குறிப்பாக,கன்னியாக்குமரி மாவட்டத்தில் தற்போது மழை வெள்ளம் சூழ்ந்து மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில்,முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் வருகின்ற நவம்பர் 19 ஆம் தேதி வெள்ளிக்கிழமை மாலை 5 மணிக்கு நடைபெறவுள்ளது.
இக்கூட்டத்தில்,மழை வெள்ள சேதம் குறித்தும் மற்றும் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரண நிதி அளிப்பது குறித்தும் அமைச்சர்களுடன் முதல்வர் ஸ்டாலின் அவர்கள் ஆலோசித்து ஒப்புதல் வழங்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.மேலும்,இக்கூட்டத்தில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து பல்வேறு முக்கிய முடிவுகள் குறித்து கலந்தாலோசிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், அக்சர் படேல் தலைமையிலான…
ஸ்ரீநகர் : இன்று பிற்பகல் 3 மணி அளவில் ஜம்மு காஷ்மீர் அனந்த்நாக் மாவட்டத்திற்கு சுற்றுலா சென்ற பயணிகள் மீது…
பஹல்காம் : ஜம்மு காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டம், பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் சுற்றுலா பயணிகள் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள்…
சென்னை : நடிகர் அஜித்குமார் சினிமா, நடிப்பை தாண்டி கார் பந்தயத்திலும் மிகுந்த ஆர்வத்துடன் பங்கேற்று வருகிறார். ஏற்கனவே அஜித்குமார்…
சென்னை : இந்த வருட ஐபிஎல் சீசன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும், ரசிகர்களுக்கும் சோகமான சீசனாகவே அமைந்து வருகிறது.…
கேரளா : ஜெயிலர் 2 படத்தின் அறிவிப்பு வெளியானதிலிருந்து, அதன் ஒவ்வொரு அப்டேட்டையும் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள். தற்போது,…