விழுப்புரம்: விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தல் வாக்குப்பதிவு காலை 6 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது.
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி திமுக எம்எல்ஏ புகழேந்தி மறைவுக்கு பின்னர், அங்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. இந்த இடைத்தேர்தலில் திமுக சார்பில் அன்னியூர் சிவா, பாமக சார்பில் சி.அன்புமணி , நாம் தமிழர் கட்சி சார்பாக மருத்துவர் அபிநயா ஆகியோர் பிரதான வேட்பாளர்களாக களமிறங்கி உள்ளனர் மொத்தமாக 29 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். அதிமுக இந்த தேர்தலை புறக்கணித்துள்ளது.
தேர்தல் நடைமுறை வழக்கத்தை போல இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. வாக்குப்பதிவு தொடங்கியதுமே திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா முதல் ஆளாக தனது வாக்கினை செலுத்தினார். அதே போல, பனையபுரத்தில் உள்ள வாக்கு சாவடியில் பாமக வேட்பாளர் சி.அன்புமணி தனது வாக்கினை செலுத்தினார்.
விக்கிரவாண்டி தொகுதியில் மொத்தம் 276 வாக்கு சாவடிகளில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. அதில் 110 வாக்குசாவடிகளில் மட்டும் வெப் கேமிரா பொருத்தி வாக்குப்பதிவு தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. குறிப்பிட்ட 5 வாக்குச்சாவடிகளில் மட்டும் இயந்திர கோளாறு காரணமாக சுமார் 30 நிமிடங்கள் வாக்குப்பதிவு தாமதாமாக ஆரம்பிக்கப்பட்டது என தகவல்கள் வெளியாகியுள்ளன.
விக்கிரவாண்டி தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெறுவது போல, 7 மாநிலங்களில் விக்கிரவண்டியுடன் சேர்த்து மொத்தம் 13 சட்டமன்ற தொகுதிகளில் இன்று சட்டமன்ற தொகுதிகளுகான இடைத்தேர்தல் நடைபெறுகிறது. வேட்பாளர் இறப்பு, நாடாளுமன்ற தேர்தலுக்காக எம்எல்ஏக்கள் ராஜினாமா உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக இடைத்தேர்தல் நடைபெறுகிறது.
டெல்லி : முன்னாள் இந்திய பிரதமர் மன்மோகன் சிங் உடல்நல குறைவு காரணமாக நேற்று டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை…
சென்னை: ஆபரணத் தங்கத்தின் விலை இந்த வார தொடக்கத்தில் எந்த மாற்றமும் இல்லாமல் விற்பனையாகி வந்த நிலையில், வார இறுதியில்…
கோவை : அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவம் தொடர்பாக திமுக அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று சாட்டையடி…
மெல்போர்ன் : இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு பார்டர் கவாஸ்கர் தொடரில் விளையாடி வருகிறது. நேற்று, 4வது…
டெல்லி: இந்தியாவின் முன்னாள் பிரதமரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான மன்மோகன் சிங் (92) காலமானார். உடல்நலக்குறைவால் நேற்று காலமான…
டெல்லி: முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடல்நலக்குறைவால் நேற்றிரவு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் காலமானார். மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும்…